பொது செய்தி

இந்தியா

இலுப்பை பூவில் இருந்து பாரம்பரிய மது தயாரிப்பு; ம.பி., அரசு பலே திட்டம்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில் இலுப்பை பூவில் இருந்து பாரம்பரிய மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பிரதேசத்தின் மாண்ட்லாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவரும், மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இம்மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பாராம்பரிய முறைப்படி இலுப்பை பூவில்
Mahua Liquor, Shivraj Singh Chouhan, Madhya Pradesh, MP_CM

போபால்: மத்திய பிரதேசத்தில் இலுப்பை பூவில் இருந்து பாரம்பரிய மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் மாண்ட்லாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவரும், மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இம்மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பாராம்பரிய முறைப்படி இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிக்கிறார்கள். புதிய கலால் கொள்கையின்படி இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிப்பது, இனி சட்டவிரோதம் ஆகாது.


latest tamil news


இதுபோல் தயாரிக்கப்படுவதை பாரம்பரிய மதுபானம் என மதுக்கடைகளில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வரின் அறிவிப்பிற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அப்படி இருக்கும் நிலையில், இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும் மதுவை சட்டபூர்வமாக்கும் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இதை பா.ஜ.,வின் தார்மீக வீழ்ச்சியாகவே கருத வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
25-நவ-202118:59:24 IST Report Abuse
 Muruga Vel அரபு நாடுகளில் பேரிச்சை மரத்திலிருந்து அரக்கா எனும் மது பிரபலம் ..கோவாவில் முந்திரி பழத்திலிருந்து தயாரிக்கிறார்கள் ..மகாராஷ்டிராவில் ஆரஞ்சிலிருந்து தயாராகிறது ...தென்னை பனையிலிருந்து தயாரிக்க வழிமுறைகள் இருக்கு ..கள் ..அவ்வளவு சுகாதாரம் இல்லாதது ...மேக் இந்த தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்கி மக்களை கவலையிலிருந்து விடுதலை தரலாம் ..
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-நவ-202120:40:12 IST Report Abuse
NicoleThomsonபலாப்பழத்தில் இருந்தும் வ்ய்ன் தயாரிக்கிறார்கள் சிக்கமகளூரு அருகில்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-நவ-202115:58:11 IST Report Abuse
sankaseshan தர்மிகத்தை பற்றி பேச காங்கிரஸ்கரனுக்கு தகுதி இல்லை .தமிழ்நாடு சாராயம் வேதிப்பொருட்கள் கலந்து செய்யப்படுவது பூவிலிருந்த்து தயாரிப்பது அப்படி இருக்காது ,பனங்கள் புளிக்காமல் குடித்தால் உடம்புக்கு நல்லது
Rate this:
Cancel
RAVIKUMAR - chennai,இந்தியா
25-நவ-202114:27:18 IST Report Abuse
RAVIKUMAR பகோடா அரசாங்கம் மது தயாரித்தால் அது ஆஹா ஓஒஹொ ..பலே திட்டம் ..இங்க அரசாங்க மதுவிற்றால் மக்களை குடிகாரராக்கிய திராவிட அரசாங்கம் ...இங்க பனை தென்னை கள் விற்க போராடினால் அதையும் விமர்சிப்பது .....அப்பட்டமான ஒருதலைபட்ச ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X