பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சிக்கு முதல் கமிஷனர் நியமனம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக, ஈரோடு மாநகராட்சி கமிஷனராக இருந்த இளங்கோவன் நியமிக்கப்பட்டு உள்ளார்.சென்னையை அடுத்த தாம்பரத்தை மையமாக வைத்து, புதிதாக மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது.இதற்கான அரசாணை, கடந்த 4ம் தேதி வெளியானது. ஆனால், இரண்டு வாரங்களைக் கடந்தும் மாநகராட்சிக்கு கமிஷனர் நியமிக்கப்படவில்லை.இதனால்,

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக, ஈரோடு மாநகராட்சி கமிஷனராக இருந்த இளங்கோவன் நியமிக்கப்பட்டு உள்ளார்.சென்னையை அடுத்த தாம்பரத்தை மையமாக வைத்து, புதிதாக மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான அரசாணை, கடந்த 4ம் தேதி வெளியானது. ஆனால், இரண்டு வாரங்களைக் கடந்தும் மாநகராட்சிக்கு கமிஷனர் நியமிக்கப்படவில்லை.இதனால், மாநகராட்சியுடன் இணைந்த உள்ளாட்சிகளில் வரி வசூலிப்பது, புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உட்பட எந்த பணிகளும் நடைபெறவில்லை.இது குறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது.

அதேநேரம், கமிஷனர் பதவியை பிடிக்க, ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உட்பட, நான்கு பேரிடையே கடும் போட்டி நிலவி வந்தது.இதில், இளங்கோவன் ஏற்கனவே செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்து இருந்ததால், அவரே தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.எதிர்பார்த்தது போலவே, இளங்கோவனை மாநகராட்சியின் முதல் கமிஷனராக நியமித்து, நகராட்சி நிர்வாக இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர், இன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X