பொது செய்தி

தமிழ்நாடு

பொது இடத்தில் பேரூராட்சி குப்பை

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. நாளொன்றுக்கு, 12 டன் குப்பை கழிவுகள் சேகரமாகின்றன.சேகரிக்கப்படும் குப்பையை, சுற்றுச்சூழல் பாதிப்பின்றி தரம் பிரித்து, மறு சுழற்சியில் முறையில் பயன்படுத்த, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதற்காக, பேரூராட்சிக்கு உட்பட்ட ராமபுரம் பகுதியில், 10 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. நாளொன்றுக்கு, 12 டன் குப்பை கழிவுகள் சேகரமாகின்றன.சேகரிக்கப்படும் குப்பையை, சுற்றுச்சூழல் பாதிப்பின்றி தரம் பிரித்து, மறு சுழற்சியில் முறையில் பயன்படுத்த, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக, பேரூராட்சிக்கு உட்பட்ட ராமபுரம் பகுதியில், 10 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா செயல்படுகிறது.இங்கு மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையை உரமாகவும், மக்காத குப்பை மறுசுழற்சி பொருட்களாகவும் மாற்றம் செய்யப்பட வேண்டும்.ஆனால், இந்த திட்டத்தை பேரூராட்சி நிர்வாகம் அண்மை காலமாக முறையாக செயல்படுத்தவில்லை என, குற்றம் சாட்டு எழுந்துள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பேரூராட்சியில் வழங்கப்பட்ட சிறிய வாகனத்தில் எடுத்து செல்லப்படும் குப்பை கழிவுகள், பேரூராட்சியின் எல்லை பகுதியில் ஆங்காங்கே கொட்டி, தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை கழிவுகளை வளம் மீட்பு பூங்காவில் கொட்டி முறையாக தரம் பிரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X