பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.வட கிழக்கு பருவ மழையால், பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று முதல் பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது

சென்னை: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.



latest tamil news


வட கிழக்கு பருவ மழையால், பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று முதல் பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


latest tamil news


எனவே, அனைத்து மாவட்டங்களிலும் எடுக்கப்பட்டு வரும் மழை தொடர் நடவடிக்கைகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும், மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
25-நவ-202109:32:15 IST Report Abuse
duruvasar ஒரு ரவுண்டு மழை பெய்து சேதங்களும் நடந்து முடிந்துவிட்டது. இப்பொழுது என்ன எச்சரிக்கை நடவடிக்கை. குதிரைகள் லாயத்தை விட்டு ஓடியபின் லாயத்தை பூட்டி எந்த பயனும் இல்லை.
Rate this:
Cancel
Sundar Anand - Chennai,இந்தியா
25-நவ-202108:42:03 IST Report Abuse
Sundar Anand என ஆசோசனை நடத்தி என்ன பயன் ஒருத்தரையும் வேலைசெய்ய விடமாட்டேன்என்கிறீர்களே அப்பறம் எப்படி விடியும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X