பொது செய்தி

தமிழ்நாடு

தங்கமாக 'தகதகக்கும்' தக்காளி! விலை உயர்வுக்கு என்ன காரணம்?

Added : நவ 25, 2021
Share
Advertisement
பெரிய லாபம் கிடைப்பதில்லைஅ.பாலமுருகன், கணியூர், மடத்துக்குளம்:சமையலில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. தற்போது வரத்து குறைவு காரணமாக, தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால், விவசாயிகளிடம் குறிப்பிட்ட அளவு விலைநிர்ணயம் செய்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு
 தங்கமாக 'தகதகக்கும்' தக்காளி! விலை உயர்வுக்கு என்ன காரணம்?


பெரிய லாபம் கிடைப்பதில்லை


அ.பாலமுருகன், கணியூர், மடத்துக்குளம்:சமையலில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. தற்போது வரத்து குறைவு காரணமாக, தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால், விவசாயிகளிடம் குறிப்பிட்ட அளவு விலைநிர்ணயம் செய்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவு லாபம் கிடைப்பது இல்லை. இதில் அரசு கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.


அரசு கொள்முதல் செய்யணும்


சு.கார்த்திகேயன், கணியூர், மடத்துக்குளம்:தக்காளியை உற்பத்தி செய்வதற்கு, சாகுபடி செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. மழை காலங்களில் விளைச்சல் பாதியாக குறைகிறது. இதனால், விவசாயிகளும் பாதிக்கின்றனர். தக்காளியின் விலை ஏற்றம் குறித்து அரசு கவனம் செலுத்தி, இதுபோன்ற கால கட்டத்தில் நேரடியாக அரசே கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும், பொது மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.


இருப்பு வைக்க முடியாது


ஜி.மனோகர், 24, மார்ச்சநாயக்கன்பாளையம், ஆனைமலை:முக்கால் ஏக்கரில், தக்காளி நடவு செய்துள்ளேன். சாதாரணமாக, முக்கால் ஏக்கருக்கு, 15 கிலோ எடை கொண்ட, 60 - 70 பெட்டிகள் தக்காளி கிடைக்கும். ஆனால், மழையால் தக்காளி செடிகள் பாதித்தது. இதனால், 2 பெட்டிகள் மட்டுமே தக்காளி கிடைத்தது. மழை பாதிப்பால் மகசூல் பெரும் அளவு குறைந்துள்ளது.

தற்போது, தக்காளி ஒரு பெட்டி, 1,200 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தக்காளி சாகுபடியால் இந்த ஆண்டு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும், உழவர் சந்தைக்கு கொண்டு சென்று தக்காளி விற்க முடியாது. மார்க்கெட் ஏலத்துக்கே கொண்டு செல்ல முடியும். விளைபொருள் மகசூல் அதிகரிக்கும் போது, கெட்டுப்போகாமல் இருப்பு வைத்து, பற்றாக்குறை ஏற்படும் போது விற்பனை செய்ய திட்டமிட வேண்டும். ஆனால், தக்காளியை நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்க முடியாது.


முதலீடு முழுவதும் வீண்


வி.மெய்ஞானம், கோதவாடி, கிணத்துக்கடவு:ஒரு ஏக்கர் பரப்பளவில், தக்காளி நாற்று நடவு செய்யப்பட்டது. குச்சி, கம்பி, நுால் போன்றவற்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. காய்ப்பு துவங்கிய நாளில், 15 கிலோ பெட்டி, 450 ரூபாய்க்கு விற்றது.தற்போது, 850 ரூபாய்க்கு விற்கிறது. இடைப்பட்ட சில நாட்கள் மட்டும், 1,250 ரூபாய் விலை கிடைத்தது. மிதமான மழை பெய்திருந்தால், தக்காளி விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும்.

பறித்த தக்காளியை, டெம்போவில் ஏற்றி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்கிறோம். தொடர் கனமழையால், செடிகள் அழுகி, பூ, காய் முற்றிலும் உதிர்ந்து விட்டன. தக்காளி சாகுபடிக்கான முதலீடு முழுவதும் வீணாகி விட்டது.


பசுமை குடிலுக்கு மானியம் தேவை


!ஈஸ்வரன், திருப்பூர் மாவட்ட கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர்:மழை பெய்தால், தக்காளி காய், பழம் மட்டுமல்ல, செடியும் அழுகிவிடும். தமிழகத்தில் மழை பெய்யும் போது, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரவழைத்து விற்கப்படும். அதிகபட்சமாக, கிலோ 100 ரூபாய்க்கு சென்றுள்ளது.

இந்தாண்டு, கர்நாடகாவிலும் மழை பெய்ததால், தக்காளி விளைச்சல் குறைந்து, அதிக தட்டுப்பாடு ஏற்பட்டதால், கிலோ, 140 வரை உயர்ந்துவிட்டது. மற்ற காய்கறியை போல், தக்காளியை நீண்ட நாள் பதப்படுத்தி வைக்க முடியாது. பசுமை குடிலில் வளர்ந்த செடிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. தமிழக அரசு, பசுமை குடில் அமைக்க முழு மானியம் அளித்தால், இதுபோன்ற காய்கறி விலை உயர்வு வராது.


விலை நிர்ணய உரிமை இல்லை!


ஜெகநாதன், கருடமுத்துார், பல்லடம்:திருப்பூரிலுள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் வழக்கமாக தக்காளி விற்பனை செய்து வருகிறேன். வாடகை வேனில் திருப்பூர் செல்வது வழக்கம். தக்காளி, கத்தரி என எதுவாக இருந்தாலும் வியாபாரிகளே விலையை நிர்ணயிக்கின்றனர். விலையை நிர்ணயிக்கும் உரிமை விவசாயிகளுக்கு கிடையாது.

மார்க்கெட் நிலவரப்படி விலையை முடிவு செய்து, டிப்பருக்கு நுாறு ரூபாய் என, வியாபாரிகள் கமிஷன் எடுத்து கொள்வார்கள். மழை காரணமாக தக்காளி செடிகள் சேதமானதால், விளைச்சல் குறைந்து விலை உயர்ந்துள்ளது.


கமிஷனுக்கு விற்பதால் விலை மாறுபாடு!


ஈஸ்வரன், ஊஞ்சப்பாளையம், பல்லடம்:குறைந்த அளவே தக்காளி சாகுபடி செய்வதால், பல்லடம் உழவர் சந்தை மூலம் விற்பனை செய்து வருகிறேன். மார்க்கெட் நிலவரப்படி உழவர் சந்தையின் நிர்வாகம் நிர்ணயிக்கும் விலையில் விற்பனை செய்கிறோம். அதிக அளவு சாகுபடி செய்தால் மட்டுமே மார்க்கெட் செல்வேன். உழவர் சந்தைக்கும், தென்னம்பாளையம் மார்க்கெட் விலைக்கும் டிப்பருக்கு, 500 ரூபாய்க்கு மேல் வித்தியாசம் இருக்கும். காய்கறி வரத்தை பொறுத்து மார்க்கெட்டில் விற்பனையும் நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் கமிஷனுக்கு விற்பதால், மார்கெட்டில் அடிக்கடி விலை மாறுபடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X