பொது செய்தி

தமிழ்நாடு

'பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்'

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருத்தணி : 'இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பதற்கு, பெற்றோர் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்' என, கலால் டி.எஸ்.பி., அனுமந்தன் திருத்தணியில் அறிவுறுத்தினார்.திருத்தணி பஸ் நிலையத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து தெருக்கூத்து நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.மதுவிலக்கு இன்ஸ்பெக்டர்

திருத்தணி : 'இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பதற்கு, பெற்றோர் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்' என, கலால் டி.எஸ்.பி., அனுமந்தன் திருத்தணியில் அறிவுறுத்தினார்.திருத்தணி பஸ் நிலையத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து தெருக்கூத்து நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமை வகித்தார். எஸ்.ஐ., சேகர் வரவேற்றார்.இதில், மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி., அனுமந்தன் பங்கேற்று தெருக்கூத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:கள்ளச்சாராயத்தை மக்கள் யாரும் குடிக்கக் கூடாது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும். சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வது தெரிந்தால் பொது மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.சமீப காலமாக, இளைஞர்கள், மாணவர்கள் போதை பொருட்கள் உபயோகிப்பது அதிகரித்து வருகிறது. இதை முழுதுமாக தடுப்பதற்கு, பெற்றோர் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பெரியவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையானால், அவர்களது குடும்பம் பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X