சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை தாக்கிய மகன் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
பொதட்டூர்பேட்டை : பாகப்பிரிவினை செய்யக்கோரி தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்கு பின், தந்தை வீடு திரும்பினார்.பொதட்டூர்பேட்டை அரங்கநாதர் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல், 70. இவரது மூத்த மகன் சக்கரப்பன், 40. சொத்து பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக, தந்தை மற்றும் மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது.நேற்று முன்தினம் வடிவேல், பொதட்டூர்பேட்டை இந்தியன்

பொதட்டூர்பேட்டை : பாகப்பிரிவினை செய்யக்கோரி தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்கு பின், தந்தை வீடு திரும்பினார்.பொதட்டூர்பேட்டை அரங்கநாதர் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல், 70. இவரது மூத்த மகன் சக்கரப்பன், 40. சொத்து பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக, தந்தை மற்றும் மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது.நேற்று முன்தினம் வடிவேல், பொதட்டூர்பேட்டை இந்தியன் வங்கி அருகே

அமர்ந்திருந்த போது, அவ்வழியாக வந்த சக்கரப்பன், சொத்து பாகப்பிரிவினை குறித்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.வாக்குவாதம் முற்றிய நிலையில், வடிவேலுவை, சக்கரப்பன் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த வடிவேலு, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து வடிவேலு அளித்த புகாரையடுத்து, பொதட்டூர்பேட்டை போலீசார், சக்கரப்பனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X