பொது செய்தி

தமிழ்நாடு

வல்லிபுரம் தரைப்பாலம் துண்டிப்பு போக்குவரத்து முடங்கியதால் தவிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருக்கழுக்குன்றம் : ஈசூர் - வல்லிபுரம் பாலாற்று தரைப்பாலம், வெள்ளப்பெருக்கில் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திருக்கழுக்குன்றம் அடுத்த ஈசூர் - வல்லிபுரம் பாலாற்று படுகையில் 50 ஆண்டுகளுக்கு முன், 700 மீ., நீள தரைப்பாலம் கட்டப்பட்டது. தற்கால போக்குவரத்து கருதி, இரு ஆண்டுகளுக்கு முன், 10.5 மீ., அகல இரு வழித்தடமாக விரிவாக்கப்பட்டது.தற்போதைய கனமழையில், பல

திருக்கழுக்குன்றம் : ஈசூர் - வல்லிபுரம் பாலாற்று தரைப்பாலம், வெள்ளப்பெருக்கில் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திருக்கழுக்குன்றம் அடுத்த ஈசூர் - வல்லிபுரம் பாலாற்று படுகையில் 50 ஆண்டுகளுக்கு முன், 700 மீ., நீள தரைப்பாலம் கட்டப்பட்டது.

தற்கால போக்குவரத்து கருதி, இரு ஆண்டுகளுக்கு முன், 10.5 மீ., அகல இரு வழித்தடமாக விரிவாக்கப்பட்டது.தற்போதைய கனமழையில், பல நாட்கள் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்து, போக்குவரத்து முடங்கியது.பாலத்தின் மேற்புறம் பெருக்கெடுத்த வெள்ளம், நேற்று வடிந்த நிலையில், பாலத்தின் 100 மீ., பகுதி முற்றிலும் பெயர்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது தெரிந்தது.திருக்கழுக்குன்றம் பிரிவு நெடுஞ்சாலை, வருவாய் துறையினர், பால சேதத்தை பார்வையிட்டனர். பால சீரழிவால், வாகனங்கள், செங்கல்பட்டு வழியே சுற்றிச் செல்கின்றன.நெடுஞ்சாலை துறையினர் கூறியதாவது:பழமையான தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் 100 மீ., நீளம் துண்டிக்கப்பட்டுள்ளது.ஆற்றில் நீர்போக்கு தொடர்வதால், முழு சேதம் அறிய முடியவில்லை. தண்ணீர் வற்றிய பின், அதை சீரமைத்து பயன்படுத்துவது பற்றி முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X