பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லையில் நாட்டிய விழா சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நடத்த, சுற்றுலா ஆர்வலர் எதிர்பார்க்கின்றனர்.மாமல்லபுரத்தில், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு பல்லவர் தொல்லியல் சின்னங்கள் அமைந்து, சுற்றுலாப் பயணியர் ரசிக்கின்றனர்.வெளிநாட்டு பயணியர், ஆண்டு இறுதி துவங்கி, சில மாதங்கள் இங்கு குவிகின்றனர். இப்பயணியர், நம் பாரம்பரிய, நாட்டுப்புற கலைகள் ரசிக்க விரும்புகின்றனர்.அவர்கள் ஆர்வம் கருதி,

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நடத்த, சுற்றுலா ஆர்வலர் எதிர்பார்க்கின்றனர்.மாமல்லபுரத்தில், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு பல்லவர் தொல்லியல் சின்னங்கள் அமைந்து, சுற்றுலாப் பயணியர் ரசிக்கின்றனர்.வெளிநாட்டு பயணியர், ஆண்டு இறுதி துவங்கி, சில மாதங்கள் இங்கு குவிகின்றனர். இப்பயணியர், நம் பாரம்பரிய,

நாட்டுப்புற கலைகள் ரசிக்க விரும்புகின்றனர்.அவர்கள் ஆர்வம் கருதி, தமிழக சுற்றுலா துறை, மத்திய சுற்றுலா துறையுடன் இணைந்து, 1992 முதல் ஆண்டுதோறும் டிச., - ஜனவரியில் நாட்டிய விழா நடத்துகிறது. தமிழக, பிற மாநில பாரம்பரிய, நாட்டுப்புற நடன, சாகச கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படும்.கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், தமிழக அரசு, சுற்றுலா தடை விதித்தது. சர்வதேச பயணியர் விமான போக்குவரத்திற்கு அனுமதியின்றி, வெளிநாட்டவர் சுற்றுலாவும் முடங்கியது. எனவே, கடந்த ஆண்டு விழா நடத்தப்படவில்லை.தொற்று கட்டுப்பட்டு, விதிமுறைகளை தளர்த்தி, தற்போது இயல்புநிலை திரும்புகிறது. வெளிநாட்டுப் பயணியர் வராத சூழலில், உள்நாட்டுப் பயணியர் பொழுதுபோக்கு கருதி, தற்போது வார இறுதி நாட்களில், சுற்றுலா கலைவிழாவாக நாட்டிய விழாவை நடத்த, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது ஒருபுறமிருக்க, 2010ம் ஆண்டு வரை, நாட்டிய பின்னணி சூழல் கருதி, அர்ச்சுனன் தபசு சிற்ப முன்புறம் விழா நடத்தப்பட்டது.கடந்த 2011 முதல், கடற்கரை கோவில் பகுதி புல்வெளியில் விழா நடத்தப்பட்டது. மீண்டும் அர்ச்சுனன் தபசு பகுதியில் நடத்த சமூக, ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X