தமிழ்நாடு

30 ஏரிகளும், 100 சதவீதம் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 25, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 130 ஏரிகளும், 100 சதவீதம் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 96 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டுப்பாட்டில், 130 ஏரிகள் உள்ளன.கடந்த வாரம் பெய்த வடகிழக்கு பருவமழையால், ஊரக
30 ஏரிகளும், 100 சதவீதம் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 130 ஏரிகளும், 100 சதவீதம் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 96 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டுப்பாட்டில், 130 ஏரிகள் உள்ளன.கடந்த வாரம் பெய்த வடகிழக்கு பருவமழையால், ஊரக வளர்ச்சித் துறையின், 130 ஏரிகளும், 100 சதவீதம் நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது.அதேபோல், பொதுப்பணித் துறையின் 96 ஏரிகளில், 85 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன; பிற ஏரிகளும் நிரம்பி வருகின்றன.ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிந்து, விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X