தமிழ்நாடு

அரசு பள்ளிகளுக்கு வசதி ஏற்படுத்த தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்

Added : நவ 25, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : ''அரசு பள்ளிகளை மேம்படுத்த, தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்,'' என, கலெக்டர் ராகுல்நாத் பேசினார்.செங்கல்பட்டு அடுத்த, அஞ்சூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு, தனியார் நிறுவனம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் உடைய கூடுதல் கட்டடம் கட்டி கொடுத்துள்ளது.இதன் திறப்பு விழா, தலைமையாசிரியர் பாஸ்கர் தலைமையில், நேற்று நடந்தது. கலெக்டர்

செங்கல்பட்டு : ''அரசு பள்ளிகளை மேம்படுத்த, தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்,'' என, கலெக்டர் ராகுல்நாத் பேசினார்.

செங்கல்பட்டு அடுத்த, அஞ்சூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு, தனியார் நிறுவனம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் உடைய கூடுதல் கட்டடம் கட்டி கொடுத்துள்ளது.இதன் திறப்பு விழா, தலைமையாசிரியர் பாஸ்கர் தலைமையில், நேற்று நடந்தது. கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்று, கூடுதல் பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து

பேசியதாவது:அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டிகொடுத்த, தனியார் நிறுவனத்திற்கு நன்றி. அரசு பள்ளிகளுக்கு, கூடுதல் கட்டடம், விளையாட்டு திடல், சுற்றுச்சுவர் ஆகியவற்றை ஏற்படுத்தி தர, தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.அஞ்சூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.எம்.எல்.ஏ., வரலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, காட்டாங்கொளத்துார் ஒன்றிய குழு தலைவர் உதயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X