தமிழ்நாடு

வார்டு உறுப்பினர் விபத்தில் பலி

Added : நவ 25, 2021
Share
Advertisement
மீஞ்சூர் : மழையில் பாதித்தவர்களுக்கு உணவு வழங்க சென்றபோது, டிராக்டரில் இருந்து தவறி விழுந்து வார்டு உறுப்பினர் இறந்தார்.மீஞ்சூர் ஒன்றியம், சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியின், 8வது வார்டு உறுப்பினராக இருந்தவர் ரவி, 50. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுப்பாரெட்டிபாளையம், பள்ளிபுரம் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.கடந்த, 20ம் தேதி மேற்கண்ட கிராம மக்கள் வெளியேற

மீஞ்சூர் : மழையில் பாதித்தவர்களுக்கு உணவு வழங்க சென்றபோது, டிராக்டரில் இருந்து தவறி விழுந்து வார்டு உறுப்பினர் இறந்தார்.மீஞ்சூர் ஒன்றியம், சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியின், 8வது வார்டு உறுப்பினராக இருந்தவர் ரவி, 50.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுப்பாரெட்டிபாளையம், பள்ளிபுரம் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.கடந்த, 20ம் தேதி மேற்கண்ட கிராம மக்கள் வெளியேற முடியாத சூழலில், அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக வார்டு உறுப்பினர் ரவி சென்றார்.உணவு பாத்திரங்களை டிராக்டரில் இருந்து இறக்கும்போது ரவி, தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். முதுகு தண்டுவடம், கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று காலை, ரவி இறந்தார். இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X