பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் ஊற்று நீரில் உறுதியாகுமா

Added : நவ 25, 2021
Share
Advertisement
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அருகே, அரசு பள்ளியின் அடித்தளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பை, சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. கட்டடத்தின் கீழே தொடர்ந்து ஊற்று சுரக்கும் நிலையில், மேற்கொள்ளப்படும் சிமென்ட் கலவை கட்டுமானம் உறுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறைகள் கொண்ட மூன்றடுக்கு கட்டடத்தின்
 சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் ஊற்று நீரில் உறுதியாகுமா

பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அருகே, அரசு பள்ளியின் அடித்தளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பை, சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. கட்டடத்தின் கீழே தொடர்ந்து ஊற்று சுரக்கும் நிலையில், மேற்கொள்ளப்படும் சிமென்ட் கலவை கட்டுமானம் உறுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறைகள் கொண்ட மூன்றடுக்கு கட்டடத்தின் அடித்தளம், கடந்த திங்கட்கிழமை சேதம் அடைந்தது.அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர். சேதமடைந்த கட்டடத்தின் அடித்தளத்தை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.கட்டடத்தின் அடிப்பகுதியில் ஒன்றரை அடி ஆழத்தில் தொடர்ந்து ஊற்று நீர் சுரந்து வருகிறது. ஊற்று நீரை மோட்டார் வைத்து வேக வேகமாக வெளியேற்றி விட்டு, சிமென்ட் கலவை கொண்டு கட்டுமான பணிகள் துவங்கின. ஊற்று நீர் தொடர்ந்து சுரப்பதால், கான்கிரீட் கலவை உறுதி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், கட்டடத்தின் கான்கிரீட் துாண்களின் இரும்பு கம்பிகளும் துருபிடித்துள்ளதும், தற்போது வெளிப்பட்டுள்ளது.கட்டடத்தின் தாங்குதிறன் மற்றும் உறுதி தன்மையை வல்லுனர்கள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X