சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபரீதம் புரியாமல் ரயில் சாகசம்: வேகமாக பரவுகிறது மாணவி வீடியோ

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் ஓடும் புறநகர் மின்சார ரயிலின் கம்பியை பிடித்தபடி நடைமேடையில் வேகமாக ஓடுகின்றனர்.முதலில் ரயிலில் ஏறும் மாணவி, தன் இடது கால், நடைமேடையில் தேய்த்தபடி ஆபத்தாக பயணிக்கிறார்.அதை தொடர்ந்து அந்த மாணவனும், ரயிலில் ஏறி, தன் இடது கால், நடைமேடையில் தேய்த்தபடி பயணிக்கிறார். நடைமேடை முடியும்
விபரீதம் புரியாமல் ரயில் சாகசம்: வேகமாக பரவுகிறது மாணவி வீடியோ

கும்மிடிப்பூண்டி : கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் ஓடும் புறநகர் மின்சார ரயிலின் கம்பியை பிடித்தபடி நடைமேடையில் வேகமாக ஓடுகின்றனர்.

முதலில் ரயிலில் ஏறும் மாணவி, தன் இடது கால், நடைமேடையில் தேய்த்தபடி ஆபத்தாக பயணிக்கிறார்.அதை தொடர்ந்து அந்த மாணவனும், ரயிலில் ஏறி, தன் இடது கால், நடைமேடையில் தேய்த்தபடி பயணிக்கிறார். நடைமேடை முடியும் இடத்தில் இருவரும் கால்களை ரயிலுக்குள் எடுத்துக் கொள்கின்றனர்

இந்த வீடியோ காட்சி, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதியில் வைரலாக பரவி வருகிறது. அந்த இருவரும், அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1, அல்லது பிளஸ் 2, பயிலும் மாணவர்களின் சீருடையை அணிந்திருந்தனர்.புறநகர் மின்சார ரயிலில், பள்ளி மாணவ - மாணவியர் 'கேங்'காக செயல்பட்டு,

இதுபோன்று ஆபத்தான சாகசங்களும், அட்டகாசங்கள் செய்வதாக, ரயில் பயணியர் தெரிவிக்கின்றனர்.கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இந்த அபாயகரமான சாகசம் அரங்கேறியதால், அங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், விசாரித்த போது, அந்த பள்ளியின் மாணவர்கள் இல்லை என தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட மாணவ - மாணவியரை கண்டறிந்து, இதுபோன்று ஆபத்தான ரயில் சாகசங்களை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணரும் வகையில், உளவியல் ரீதியான வகுப்புகளும், பயிற்சிகளும் அரசு அளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.



Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
27-நவ-202114:29:38 IST Report Abuse
INDIAN Kumar இளம் கன்றுகள் பயம் அறியாது என்பதட்கு இவர்கள் உதாரணம் , இந்த திறமையை வேறு விதங்களில் பயன்படுத்தி முன்னேறலாம்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
26-நவ-202116:32:19 IST Report Abuse
NicoleThomson இந்த மாணவியை மாணவனை விளையாட்டு போட்டிகளின் பக்கம் திருப்பினால் அருமையான முடிவுகளை தருவார்கள் , மிரட்டி அடிபணிய வைக்க முயலாதீர்கள்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
26-நவ-202116:31:11 IST Report Abuse
NicoleThomson எங்கெங்கே அந்த வீடியோ? ஏனெனில் மேலேயுள்ள படத்தில் லெக்கின்ஸ் நீல கலரிலும் கீழேயுள்ள படத்தில் பேண்ட் கருப்பு நிறத்திலும் உள்ளது , இரண்டாவது படம் மாணவிதானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X