பொது செய்தி

இந்தியா

வயலில் சேதமடைந்தால் மட்டுமே இழப்பீடு உண்டு

Added : நவ 25, 2021
Share
Advertisement
பெங்களூரு : வயலில் சேதமடைந்த பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைக்கும். அறுவடை செய்து களஞ்சியத்தில் வைத்திருந்த பயிர் பாழானால், நிவாரணம் வழங்கப்படாது என, தகவல் வெளியாகியுள்ளது. இது விவசாயிகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.கர்நாடகாவில், கடந்த வாரம் பெய்த கனமழையால், பெருமளவில் விளைச்சல் பாழாகி, விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனர். நெல், மக்காச்சோளம், வாழை, தென்னை,

பெங்களூரு : வயலில் சேதமடைந்த பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைக்கும். அறுவடை செய்து களஞ்சியத்தில் வைத்திருந்த பயிர் பாழானால், நிவாரணம் வழங்கப்படாது என, தகவல் வெளியாகியுள்ளது.

இது விவசாயிகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.கர்நாடகாவில், கடந்த வாரம் பெய்த கனமழையால், பெருமளவில் விளைச்சல் பாழாகி, விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனர். நெல், மக்காச்சோளம், வாழை, தென்னை, காய்கறிகள், கேழ்வரகு என, எதுவும் மிஞ்சவில்லை. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாழாகின.பெரும்பாலான விவசாயிகள், பயிர்களை அறுவடை செய்து, களஞ்சியத்தில், காலியிடங்களில் குவித்து வைத்திருந்தனர். ஆனால் தொடர் மழையால், இந்த விளைச்சல் அழுகிவிட்டன.

இதற்கும் நிவாரணம் கிடைக்குமென, விவசாயிகள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் நிலத்தில் பாழான விளைச்சலுக்கு மட்டுமே, நிவாரணம் வழங்கப்படும். அறுவடை செய்யப்பட்டு, களஞ்சியம் அல்லது காலியிடத்தில் பாழான விளைச்சலுக்கு, நிவாரணம் கிடைக்காது என, தகவல் வெளியாகிஉள்ளது.நிலத்தில் சேதமடைந்த விளைச்சல்கள், விதிமுறைப்படி ஆய்வு நடத்தப்படுகிறது. களஞ்சியத்தில் சேதமடைந்த விளைச்சலை ஆய்வு செய்யவில்லை. ஏற்கனவே நஷ்டத்தில் சிக்கி தவிக்கும் விவசாயிகள், அரசின் விதிமுறையால் தலையில் கை வைத்து அமர்ந்துள்ளனர். அறுவடை செய்து, பாழான விளைச்சலுக்கும் நிவாரணம் வழங்கும்படி, வலியுறுத்தல் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X