பொது செய்தி

இந்தியா

சத்ய சாய் அறக்கட்டளை சமூக நலனில் அக்கறைடூ கவர்னர் தாவர்சந்த் கெலாட் புகழாரம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சிக்கபல்லாபூர் : ''சத்ய சாய் அறக்கட்டளை சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. அந்த அறக்கட்டளை மூலம் படித்த பல மாணவர்கள் உயர்ந்த பதவிக்கு சென்றுள்ளனர்,'' என கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் புகழாரம் சூட்டினார்.சத்ய சாய் பாபாவின் 96வது பிறந்த நாள் விழா, சிக்கபல்லாபூரின் சத்ய சாய் கிராமத்தில் நடந்தது. கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் விழாவை துவக்கி

சிக்கபல்லாபூர் : ''சத்ய சாய் அறக்கட்டளை சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. அந்த அறக்கட்டளை மூலம் படித்த பல மாணவர்கள் உயர்ந்த பதவிக்கு சென்றுள்ளனர்,'' என கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் புகழாரம் சூட்டினார்.சத்ய சாய் பாபாவின் 96வது பிறந்த நாள் விழா, சிக்கபல்லாபூரின் சத்ய சாய் கிராமத்தில் நடந்தது. கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் விழாவை துவக்கி வைத்தார்.கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதே வேளையில் வெவ்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட மகளிருக்கு மனித மேன்மை விருது வழங்கப்பட்டது.

விழாவில் கவர்னர் பேசியதாவது:கொரோனா வேகமாக பரவிய போது, மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போலீசார் என பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றியவர்களை கவுரவித்தது பெருமையாக உள்ளது. கொரோனா என்ற மஹாமாரி உலகையே அச்சுறுத்துகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறம்பட செயல்பட்டதால் கொரோனா கட்டுக்குள் வந்தது. நாட்டில் அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டு வெற்றி பெற முடிந்தது.நம் நாட்டில் தயாரான தடுப்பூசி வெளிநாடுகளில் பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. சத்ய சாய் அறக்கட்டளை சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. அந்த அறக்கட்டளை மூலம் படித்த பல மாணவர்கள் உயர்ந்த பதவிக்கு சென்றுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X