பொது செய்தி

இந்தியா

மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களின் உறவினர்களுக்கே டிக்கெட்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பெங்களூரு : உள்ளாட்சிகளிலிருந்து கர்நாடக சட்ட மேலவைக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ் ம.ஜ.த., என மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களின் உறவினர்களே, டிக்கெட் பெற்றுள்ளனர். காங்கிரசில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.சட்டமேலவையின் 25 இடங்களுக்கு, டிசம்பர் 10ல் தேர்தல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியான பா.ஜ.,, எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், இந்த தேர்தலை கவுரவ

பெங்களூரு : உள்ளாட்சிகளிலிருந்து கர்நாடக சட்ட மேலவைக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ் ம.ஜ.த., என மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களின் உறவினர்களே, டிக்கெட் பெற்றுள்ளனர்.

காங்கிரசில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.சட்டமேலவையின் 25 இடங்களுக்கு, டிசம்பர் 10ல் தேர்தல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியான பா.ஜ.,, எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், இந்த தேர்தலை கவுரவ பிரச்னையாகவே கருதுகின்றன. குடும்ப அரசியலுக்கு தாங்கள் முக்கியத்துவம் தரமாட்டோம் என கூறி வரும், மூன்று கட்சிகளின் தலைவர்கள், தங்களின் உறவினர்களுக்கே டிக்கெட் அளித்துள்ளனர்.

பா.ஜ.,வில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷின் சகோதரர் பிரதீப் ஷெட்டர், தார்வாடிலிருந்து களமிறங்குகிறார். ம.ஜ.த., சார்பில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன் சூரஜ் போட்டியிடுகிறார்.காங்கிரஸ் சார்பில், பெலகாவி ரூரல் எம்.எல்.ஏ., லட்சுமி ஹெப்பால்கரின் சகோதரர் சின்னராஜ ஹட்டிஹோளி, பெலகாவி தொகுதியில் களமிறங்கியுள்ளார். துமகூரில் மூத்த தலைவர் ராஜண்ணாவின் மகன் ராஜேந்திரா, பெங்களூரு ரூரல் தொகுதியில், மாநில காங்., தலைவர் சிவகுமாரின் உறவினர் ரவி.விஜயபுராவில் முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீலின் சகோதரர் சுனில் கவுடா பாட்டீல், ராய்ச்சூரில் வம்.எல்.ஏ., அமரேகவுடா பாட்டீலின் அண்ணன் மகன் சரணகவுடா பாட்டீல், குடகில் காங்கிரசின் முன்னாள் அமைச்சரும், பா.ஜ.,வின் இன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மஞ்சுவின் மகன் மந்தர் கவுடா போட்டியிடுகின்றனர்.பீதரில் எம்.எல்.ஏ., ராஜசேகர பாட்டீலின் சகோதரர் பீமராவ் பாட்டீல், உத்தரகன்னடாவில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் உறவினர் பீமண்ணா போட்டியிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X