பொது செய்தி

இந்தியா

சாமுண்டி மலையில் அபிவிருத்தி பணி; இயற்கை சுற்றுச்சூழல் பாழாகும்

Added : நவ 25, 2021
Share
Advertisement
மைசூருரு : 'சாமுண்டி மலையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டால், இயற்கை சுற்றுச்சூழல் பாழாகும். பணிகளை நிறுத்தி சாமுண்டி மலையை காப்பாற்ற வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியிடம், 'சரஸ்வதி சன்மான்' விருது பெற்ற இலக்கியவாதி பைரப்பா கோரியுள்ளார்.இந்தியாவிலுள்ள புண்ணிய தளங்களை, அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணியரை ஈர்க்கும் நோக்கில், மத்திய அரசு, 'பிரசாதா' என்ற

மைசூருரு : 'சாமுண்டி மலையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டால், இயற்கை சுற்றுச்சூழல் பாழாகும். பணிகளை நிறுத்தி சாமுண்டி மலையை காப்பாற்ற வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியிடம், 'சரஸ்வதி சன்மான்' விருது பெற்ற இலக்கியவாதி பைரப்பா கோரியுள்ளார்.

இந்தியாவிலுள்ள புண்ணிய தளங்களை, அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணியரை ஈர்க்கும் நோக்கில், மத்திய அரசு, 'பிரசாதா' என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.திட்டத்தின் கீழ், நாட்டின் முக்கியமான புண்ணிய தளங்களில், பல அபிவித்தி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கர்நாடகா மைசூரின், வரலாற்று பிரசித்தி பெற்ற சாமுண்டி மலையும் கூட, திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வல்லுனர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலக்கியவாதி பைரப்பா எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:மத்திய அரசின், 'பிரசாதா' திட்டத்தால், சாமுண்டி மலைக்கு தொந்தரவு ஏற்படும். இத்திட்டத்தால் இம்மலையும், காங்கிரீட் காடாக மாறும்.சாமுண்டி மலையில் கட்டியுள்ள, 'மல்ட்டி லெவல் பார்க்கிங்' கட்டடம், வர்த்தக கட்டடங்களால், மலையின் அமைதி பாழாகி, வர்த்தக மையமாக மாறியுள்ளது.

இங்கு புதிதாக கட்டடங்களை கட்டுவதற்கு பதில், ஏற்கனவே அங்குள்ள கட்டங்களை இடிக்க வேண்டும்.மலையில், 4,000 பேர் வசிக்கின்றனர். அவர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டும், அங்கிருக்க வாய்ப்பளிக்க வேண்டும். மலையில் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.சாமுண்டி மலைக்கு, வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்சார வாகனம், பஸ்களை அரசே ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X