பொது செய்தி

இந்தியா

முன்னாள் முதல்வர் எடியூரப்பா கே.ஜே.பி., எனும் கர்நாடக ஜனதா கட்சியில் சேர்வார்,

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஷிவமொகா : "முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எதிர் வரும் நாட்களில் பா.ஜ.,வை விட்டு விலகி, கே.ஜே.பி., எனும் கர்நாடக ஜனதா கட்சியில் சேர்வார்," என மாநில காங்., செயல் தலைவர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.ஷிவமொகாவில் அவர் நேற்று கூறியதாவது:கடந்த, 2011ல் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா, பா.ஜ.,விலிருந்து விலகி, கே.ஜே.பி.,யில் சேர்ந்தார்.

ஷிவமொகா : "முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எதிர் வரும் நாட்களில் பா.ஜ.,வை விட்டு விலகி, கே.ஜே.பி., எனும் கர்நாடக ஜனதா கட்சியில் சேர்வார்," என மாநில காங்., செயல் தலைவர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.ஷிவமொகாவில் அவர் நேற்று கூறியதாவது:

கடந்த, 2011ல் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா, பா.ஜ.,விலிருந்து விலகி, கே.ஜே.பி.,யில் சேர்ந்தார். பா.ஜ.,வுக்கு ஓட்டுகளை குறைத்ததில், கே.ஜே.பி., வெற்றி பெற்றது. 2014ன் லோக்சபா தேர்தலில், அவர் மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்து, கே.ஜே.பி.,யை தோற்கடித்தார்.மத்திய பா.ஜ., தலைவர்கள், தற்போது எடியூரப்பாவை அலட்சியப்படுத்துகின்றனர். அவமதிப்பாக நடத்துகின்றனர். இதனால் இவர் கட்சி தலைவர்கள் மீது, கோபமடைந்துள்ளார். எடியூரப்பா மீண்டும் கே.ஜே.பி.,க்கு செல்வார். பசவராஜ் பொம்மை அரசு, விரைவில் கவிழும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X