மேலவை தேர்தலில், ரவுடி பின்னணியுள்ள வேட்பாளர்கள்; காங்கிரஸ் மீத பா.ஜ., குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேலவை தேர்தலில், ரவுடி பின்னணியுள்ள வேட்பாளர்கள்; காங்கிரஸ் மீத பா.ஜ., குற்றச்சாட்டு

Added : நவ 25, 2021
Share
பெங்களூரு : மேலவை தேர்தலில், ரவுடி பின்னணியுள்ள வேட்பாளர்களை, காங்கிரஸ் களமிறக்கியது குறித்து, பா.ஜ., சாடியுள்ளது.இது தொடர்பாக, பா.ஜ., நேற்று கூறியதாவது:மேலவை தேர்தலில் போட்டியிட, கண்ணியமான நபருக்கு, காங்கிரஸ் டிக்கெட் கொடுத்துள்ளது. அநாகரிகமான நடத்தையால், போலீசாரால் கைது செய்யப்பட்டு, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தின் சிறையில் கம்பி எண்ணிய நபரை, மேலவை

பெங்களூரு : மேலவை தேர்தலில், ரவுடி பின்னணியுள்ள வேட்பாளர்களை, காங்கிரஸ் களமிறக்கியது குறித்து, பா.ஜ., சாடியுள்ளது.இது தொடர்பாக, பா.ஜ., நேற்று கூறியதாவது:

மேலவை தேர்தலில் போட்டியிட, கண்ணியமான நபருக்கு, காங்கிரஸ் டிக்கெட் கொடுத்துள்ளது. அநாகரிகமான நடத்தையால், போலீசாரால் கைது செய்யப்பட்டு, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தின் சிறையில் கம்பி எண்ணிய நபரை, மேலவை உறுப்பினராக்க, ஊழல் தலைவர் சிவகுமார் முற்பட்டுள்ளார்.

காங்., வேட்பாளரின் ரவுடி பின்னணி, சிவகுமாரை ஈர்த்திருக்குமோ... கோத்வால் ராமச்சந்திரனின் சீடரே, மாநில காங்., தலைவர் இடத்தில் அமர்ந்துள்ள நிலையில், ரவுடிகள் நற்பண்பாளர்கள் போன்று தென்பட்டதில், ஆச்சர்யம் ஏதும் இல்லை.எஸ்.ஆர்.பாட்டீல் போன்ற மூத்தவர்களை கைவிட்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபரை, ஊழல், நில மோசடி செய்த, பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட, ரவுடி பின்னணி போன்ற குணங்கள், மேலவை உறுப்பினராக தகுதியா?

இந்நபரை எந்த தகுதியின் அடிப்படையில், மூத்தவர்களின் அவைக்கு அனுப்ப சிவகுமார் முன் வந்துள்ளார். வினாஷ காலே விபரீத புத்தி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X