பொது செய்தி

இந்தியா

 சீக்ரெட் சிங்காரம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
காயலாங்கடை வியாபாரிக்கு 'சீட்!'எம்.எல்.சி., தேர்தலில் புருவத்தை உயர்த்தி பார்க்கும் கேபிடல் சிட்டியோட தொகுதிக்கு கை வேட்பாளர் கோல்டு சிட்டியோட மண்ணின் மைந்தர்.இவர், காயலாங்கடை ஓனர். காசு, பணம், துட்டு, மணி, மணி தான் இவரின் பாலிசி. இவர், ஓடாத கப்பலை பிரித்தெடுக்கும் ஒப்பந்த காரர். கோல்டு மைனிங் ஷாப்ட்டுகளையும் பிரித்து பணம் சேர்ந்தவர். கனமான வியாபாரி.கோலார் பக்கம்

காயலாங்கடை வியாபாரிக்கு 'சீட்!'எம்.எல்.சி.,

தேர்தலில் புருவத்தை உயர்த்தி பார்க்கும் கேபிடல் சிட்டியோட தொகுதிக்கு கை வேட்பாளர் கோல்டு சிட்டியோட மண்ணின் மைந்தர்.இவர், காயலாங்கடை ஓனர். காசு, பணம், துட்டு, மணி, மணி தான் இவரின் பாலிசி. இவர், ஓடாத கப்பலை பிரித்தெடுக்கும் ஒப்பந்த காரர்.

கோல்டு மைனிங் ஷாப்ட்டுகளையும் பிரித்து பணம் சேர்ந்தவர். கனமான வியாபாரி.கோலார் பக்கம் 'சீட்' பெற நடமாடி பார்த்தார். அங்கு காலை வாரும் பழைய புலிகள் இருப்பதால், ஓட்டு வியாபாரம் 'லாஸ்' ஆகிடும்னு, ஒதுங்கி கொண்டார்.'டாப் டக்கர்' கேபிடல் சிட்டியை பிடிக்க சேர வேண்டியவங்களுக்கு முதலீட்டை செலுத்தி, வேட்பாளராக

ஆகிவிட்டார்.கொடி துாக்கல, கோஷம் போடல, யாரையும் பாராட்டல, போராட்டம் பக்கம் திரும்பல.காசு, பணம், துட்டு, மணி, மணி இருப்பதை டாப் டூ பாட்டம் வரை காண்பித்து சீட் வாங்கிட்டதா, வியாபார அரசியல்வாதிங்க சொல்றாங்க.சீட் வாங்கியாச்சு. மற்றவை களத்தில் டீல் பண்ண போறாராம் அந்த கோட்டீஸ்வர வியாபாரி.எம்.பி., ஆக்க
போறாங்களாம்!சட்ட மேலவை தலைவரா இருந்த கை காரருக்கு, 'சீட்' தராமல் ஒதுக்கி வைக்கலயாம். இந்த பதவியை விட ஒசத்தியான பதவியை வழங்க போறதா ஸ்டேட் தலைவரு தெரிவித்திருக்கிறாரு.ஸ்டேட் பாலிடிக்ஸ் போதும். அவரை சென்ட்ரல் பாலிடிக்சுக்கு அனுப்ப 'ராஜ்யசபா' உறுப்பினர் பதவி இவருக்கு வழங்க போறாங்களாம்.பாகல்கோட்டில் இவரோட

ஜாதி ஜனம், கட்சியும் வேணாம் கொடியும் வேணாம்னு அலற விட்டதால், அமைதிப்படுத்த 'எம்.பி.,' ஆக்க போறோம்னு நம்ப வெச்சிருக்காரு.ஏன்னா, இவரும் சி.எம், பதவிக்கு ஆசைபடுவதை தடுக்கவே டெல்லி பக்கம் அனுப்ப போறாங்களாம்!24 மணி நேரத்திற்குள் வேட்பாளர்!கை கட்சியை சேர்ந்த சாமுண்டீஸ்வரி தொகுதிக்காரர் புல்லுக்கட்டு கட்சிக்கு

தாவி, 24 மணி நேரம் கூட ஆகல.அதற்குள்ளாக, புல்லுக்கட்டு கட்சியின் எம்.எல்.சி., தேர்தலுக்கு வேட்பாளராகவே அவரை ஆக்கிட்டாங்க.காலாகாலமாக புல்லுக்கட்டை தலையில் துாக்கி வைத்து கொண்டாடினவங்க எல்லாம், கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படறாங்களாம். புது உறவுக்கும், வரவுக்கும் ஒத்துப்போறாங்களாம். இவரை ஜெயிக்க வைக்க சவாலை சந்திக்கிறாங்களாம். அரசியல்னா இதெல்லாம் சகஜம்னு சொல்றாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X