பொது செய்தி

இந்தியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி ; காங்கிரஸ் தலைவர் சிவகுமார்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பெங்களூரு ; ''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும்,'' என, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று அவர் கூறியதாவது:தொடர் மழையால் மூன்று ஆண்டுகளாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வித நிவாரண நிதி கிடைக்காமல் விவசாயிகள்

பெங்களூரு ; ''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும்,'' என, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று அவர் கூறியதாவது:தொடர் மழையால் மூன்று ஆண்டுகளாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வித நிவாரண நிதி கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர்.மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் விவசாயிகள் விஷயத்தில் ஏன் தாமதம் செய்கிறார்.உரம், கிருமி நாசினி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. விவசாயிகளை காக்க அரசு முன் வர வேண்டும்.கடந்தாண்டு அறிவித்த நிவாரண நிதி இதுவரை பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு பயனில்லை.

வெறும் பிரசாரத்துக்கு மட்டுமே பயன்படுகிறது.எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும்.பா.ஜ.,வினர் விவசாயிகளை நடுத்தெருவில் விட்டுள்ளனர். பா.ஜ.,வை அழிக்க அக்கட்சி தேசிய பொது செயலர், சி.டி.ரவி ஒருவர் மட்டுமே போதும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X