பொது செய்தி

இந்தியா

அனைவருக்கும் வீடு திட்டத்தில் 3.61 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : அனைவருக்கும் வீடு எனப்படும் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், 17 மாநிலங்களில், மேலும், 3.61 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.நாடு முழுதும் வீடில்லாதோருக்கு, 2022ம் ஆண்டுக்குள் வீடி கட்டித் தருவதற்காக, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மேலும், 3.61 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி


புதுடில்லி : அனைவருக்கும் வீடு எனப்படும் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், 17 மாநிலங்களில், மேலும், 3.61 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.



latest tamil news


நாடு முழுதும் வீடில்லாதோருக்கு, 2022ம் ஆண்டுக்குள் வீடி கட்டித் தருவதற்காக, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மேலும், 3.61 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுதும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 3.61 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு, துறைச் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையிலான மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



அதையடுத்து, இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை, 1.14 கோடியாக உயர்கிறது. இதில், 52.5 லட்சம் வீடுகள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு உள்ளன.மொத்தம், 7.52 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தில், மத்திய அரசின் பங்காக, 1.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 1.13 லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugesan -  ( Posted via: Dinamalar Android App )
26-நவ-202106:39:43 IST Report Abuse
Murugesan ...0
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
25-நவ-202114:15:30 IST Report Abuse
Sandru எத்தனை நாட்கள்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே. வாயிலே வடைகள் சுடும் எத்தர்கள்தான்.
Rate this:
selva - Chennai,இந்தியா
25-நவ-202118:25:32 IST Report Abuse
selvaநீ சொல்லேன்...
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
25-நவ-202113:54:50 IST Report Abuse
சீனி இதற்கான கட்டுமான பொருட்களான சிமெண்டு, செங்கல், மணல், கம்பி, கதவு, ஜன்னல் முதல் தேவையானவைகளை மக்களுக்கு நேரிடையா கொடுக்குமாறு அரசாங்கமே டாடா அல்லது பிர்லா போன்ற நேர்மையான கம்பெனிகளிடம் பணம் கொடுத்து விட்டுவிடலாம். அப்போ செலவும் குறையும், தரமான பொருட்களும் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X