கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலை கணவருக்கு ஆயுள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம் : நாகை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட் தீர்ப்பளித்தது.நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் அருகே வட மழையைச் சேர்ந்தவர் முருகானந்தம்,38. இவரது மனைவி கவிதா,27. இவர்களுக்கு 13 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். கவிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதியினருக்குள் அடிக்கடி தகராறு

நாகப்பட்டினம் : நாகை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட் தீர்ப்பளித்தது.

நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் அருகே வட மழையைச் சேர்ந்தவர் முருகானந்தம்,38. இவரது மனைவி கவிதா,27. இவர்களுக்கு 13 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். கவிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதியினருக்குள் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது.கடந்த 2015, மார்ச்,22 ம் தேதி இருவருக்கும் பிரச்னை எழுந்துள்ளது. அன்றிரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த கவிதாவின் கழுத்தை கத்தியால் முருகானந்தம் வெட்டியுள்ளார். இதில் கவிதா இறந்தார்.கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை நாகை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பு அளித்தார். மனைவியை கொலை செய்த முருகானந்தத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X