பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தைகளில் தக்காளி விலையை குறைத்த அதிகாரிகள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை : தமிழக உழவர் சந்தைகளில் தக்காளி விலையை குறைத்து நிர்ணயம் செய்ததால், விவசாயிகள், வியாபாரிகள் பலர் தக்காளி விற்பனையை நிறுத்தினர்.தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் இரவு, தோட்டக்கலைத்துறை வணிக பிரிவு அதிகாரிகள், வாய்மொழி உத்தரவுகளை, உழவர்சந்தை அதிகாரிகளுக்கு பிறப்பித்தனர்.நேற்று தக்காளி முதல் தரம் கிலோ, 90 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ, 76 - 86


சென்னை : தமிழக உழவர் சந்தைகளில் தக்காளி விலையை குறைத்து நிர்ணயம் செய்ததால், விவசாயிகள், வியாபாரிகள் பலர் தக்காளி விற்பனையை நிறுத்தினர்.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் இரவு, தோட்டக்கலைத்துறை வணிக பிரிவு அதிகாரிகள், வாய்மொழி உத்தரவுகளை, உழவர்சந்தை அதிகாரிகளுக்கு பிறப்பித்தனர்.நேற்று தக்காளி முதல் தரம் கிலோ, 90 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ, 76 - 86 ரூபாய் என அதிகாரிகள் நிர்ணயித்தனர். இதற்கு விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை அப்படியே மொத்தமாக கிலோ, 120 ரூபாய்க்கு ஓட்டல்கள், மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்தனர்.உழவர்சந்தைகளில் விலை குறைவாக கிடைக்கும் என்ற எண்ணத்தில் தக்காளி வாங்க வந்த பொதுக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X