அரசியல் செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது : அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை : மின் தடை போன்று தக்காளி விலை உயர்வும் தற்காலிகமானது தான் என வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண் பட்ஜெட் மற்றும் மானியகோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கிண்டியில் உள்ள வேளாண் வணிகப்பிரிவு அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பிறகு, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம்


சென்னை : மின் தடை போன்று தக்காளி விலை உயர்வும் தற்காலிகமானது தான் என வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வேளாண் பட்ஜெட் மற்றும் மானியகோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கிண்டியில் உள்ள வேளாண் வணிகப்பிரிவு அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பிறகு, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:

தமிழகத்தில் பரவலாக பெய்த கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் வெள்ளத்தால், தக்காளியை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. போக்குவரத்து பாதிப்பால், தக்காளியை எடுத்து வருவதில் சிக்கல் நீடித்தது. இதனால், தக்காளி விலை உயர்ந்துள்ளது.

தற்போது சென்னைக்கு தக்காளி வரத்து மெல்ல அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 600 டன்கள் அளவிற்கு வரத்து இருந்தது. நேற்று 800 டன்கள் அளவிற்கு வரத்து இருந்தது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தக்காளி எடுத்துவர வியாபாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். தற்போது கிலோ 80 ரூபாயாக விலை குறைந்துள்ளது.

எனவே, மின்தடை போன்று தக்காளி விலை உயர்வு தற்காலிகமானதுதான். தக்காளி உள்பட காய்கறிகள் உற்பத்தியை அனைத்து கிராமங்களிலும் அதிகரிக்க கருணாநிதியின் வேளாண் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X