சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தீக்குளிக்க முயற்சி: 40பேர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இருவர் தீக்குளிக்க முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய பணிகள் தீவிரமாக நடந்து
 ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு  தீக்குளிக்க முயற்சி: 40பேர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இருவர் தீக்குளிக்க முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.கோவில் தேரடி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 20 கடைகள், ஜூலை 15ம் தேதி அகற்றப்பட்டன.

நேற்று காலை 11:00 மணிக்கு அறநிலை துறை அதிகாரிகள் கிழக்கு கோபுரத்தின் முன் மண்டபத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 12 கடைகளை அகற்றினர்.அப்போது 100க்கு மேற்பட்டோர் திரண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பூட்டியிருந்த கடைகளை உடைத்து, பொருட்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர்கள், விருத்தாசலம் கடைவீதி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது சிலர் தனியார் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்தனர். வாலிபர்கள் இருவர், தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து , மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உட்பட 40 பேரை கைது செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X