வட்டிக்கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி : 4 பேர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை காளவாசலை சேர்ந்தவர் சிவக்குமார் 48. இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். அக்., 7ம் தேதி டூவீலரில் காளையார்கோவில் சென்றவர் அங்கு பணம் வசூலித்துள்ளார். அங்கிருந்து நண்பர் கருப்பு ராஜா 28, என்பவருடன் டூவீலரில் சிவகங்கைக்கு திரும்பினார். கண்டனிபட்டி அருகே வந்தபோது 4 பேர் கத்தியை காட்டி வழிமறித்து அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம், டூவீலர், நகை, அலைபேசியை


சிவகங்கை : சிவகங்கை காளவாசலை சேர்ந்தவர் சிவக்குமார் 48. இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். அக்., 7ம் தேதி டூவீலரில் காளையார்கோவில் சென்றவர் அங்கு பணம் வசூலித்துள்ளார். அங்கிருந்து நண்பர் கருப்பு ராஜா 28, என்பவருடன் டூவீலரில் சிவகங்கைக்கு திரும்பினார். கண்டனிபட்டி அருகே வந்தபோது 4 பேர் கத்தியை காட்டி வழிமறித்து அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம், டூவீலர், நகை, அலைபேசியை வழிப்பறி செய்து தப்பினர்.

காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி, தனிப்படை சிறப்பு எஸ்.ஐ., ராமசந்திரன் தலைமையிலான குழுவினர் தேடினர். இதில் ஈடுபட்ட பரமக்குடி முத்தாலம்மன் கோயில் தெரு முத்துராசு 24, திருப்புத்துார் அருகே கருப்பூர் மலைச்சாமி 28, மேலுார் அருகே ஏ.கோவில்பட்டி சத்யபிரபு 26, காளையார்கோவில் அருகே கிழக்கு ஒத்தவீடு பாலமுருகன் 26, ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X