சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நிலாவில் உலாப் போகும் வாகனம்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021
Share
Advertisement
அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா', நிலாவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. 'ஆர்டெமிஸ்' என்ற அந்த திட்டத்தின்படி, விண்வெளி வீரர்கள், நிலாவில் ஆய்வு மேற்கொள்ள, 'எல்.டி.வி.,' எனப்படும் நிலாத் தரை வாகனத்தை தயாரிக்கும் பொறுப்பை நார்த்ராப் க்ரும்மன் நிறுவனத்திடம் தந்துள்ளது.அண்மையில், நார்த்ராப் க்ரும்மன், அதற்கான பணிகளைத் துவங்கியது.
 நிலாவில் உலாப் போகும் வாகனம்

அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா', நிலாவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. 'ஆர்டெமிஸ்' என்ற அந்த திட்டத்தின்படி, விண்வெளி வீரர்கள், நிலாவில் ஆய்வு மேற்கொள்ள, 'எல்.டி.வி.,' எனப்படும் நிலாத் தரை வாகனத்தை தயாரிக்கும் பொறுப்பை நார்த்ராப் க்ரும்மன் நிறுவனத்திடம் தந்துள்ளது.

அண்மையில், நார்த்ராப் க்ரும்மன், அதற்கான பணிகளைத் துவங்கியது. எல்.டி.வி.,க்கான சக்கரங்களை மிச்செலினிடமிருந்தும், பிற பாகங்களை லுானார் அவுட்போஸ்ட், இன்டியூடிவ் மெசின்ஸ் மற்றும் ஏ.வி.எல்., போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களிடம் வாங்க நார்த்ராப் ஒப்பந்தம் போட்டுள்ளது.நாசாவின் விண்வெளி வீரர், கடைசியாக 1972ல் நிலாவுக்கு சென்று வந்தனர். அப்போதைய நிலா விஜயத்தின்போது, லுானார் ரோவர் என்ற மின் வாகனத்தை எடுத்துச் சென்றதால், நிலா மண் மீது அவர்களால் 7.6 கி.மீ தொலைவு வரை சென்று சோதனைகள் செய்து, விண்கலத்திற்குத் திரும்ப முடிந்தது.

இந்த முறை, எல்.டி.வி., வாகனம் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளையும், ரோபோ மற்றும் சரக்குகளைக் கையாளும் திறனும், அதிக தொலைவு செல்ல உதவும் மின் கலன்களையும் கொண்டிருக்கும் என நார்த்ராப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாகனம் அடுத்த நிலாப் பயணத்தில் முக்கிய பங்கு ஆற்றும் என்பது மட்டும் உறுதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X