பொது செய்தி

தமிழ்நாடு

தலைக்கு 2 கிலோ மட்டுமே தக்காளி! பத்திரிகை காண்பித்தால் திருமணத்திற்கு மொத்த ‛சப்ளை'

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
பெ.நா.பாளையம்: கோவை உழவர் சந்தையில் நபர் ஒருவருக்கு, 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, வியாபாரிகளுக்கு வேளாண் வணிக அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.கோவையில் தக்காளி சீராக பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், பதுக்கலை தடுக்கவும், தோட்டக் கலை துறையினர், கடந்த இரண்டு நாட்களாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை துணை வேளாண் இயக்குனர் (வேளாண்
தக்காளி, விலை உயர்வு, கட்டுப்பாடு, உழவர் சந்தை

பெ.நா.பாளையம்: கோவை உழவர் சந்தையில் நபர் ஒருவருக்கு, 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, வியாபாரிகளுக்கு வேளாண் வணிக அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

கோவையில் தக்காளி சீராக பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், பதுக்கலை தடுக்கவும், தோட்டக் கலை துறையினர், கடந்த இரண்டு நாட்களாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை துணை வேளாண் இயக்குனர் (வேளாண் வணிகம்) சுந்தரவடிவேலு கூறியதாவது: மழையால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வுக்கு சென்றபோது, நேரில் பார்த்தோம்.


latest tamil news


தக்காளி தட்டுப்பாடு காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில், நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ தக்காளி மட்டுமே வழங்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளோம். உழவர் சந்தையில் மொத்தமாக தக்காளியை யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு திருமண பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை முறைப்படி சமர்ப்பித்தால் மட்டுமே அதிக அளவில் தக்காளி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-நவ-202100:17:32 IST Report Abuse
DARMHAR Please don't repeat the same comment
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-நவ-202100:17:32 IST Report Abuse
DARMHAR நுகர்வோர் யாரும் வாங்காமல் இருந்தால் பதுக்கி வைத்திருக்கும் ஃபிராடு வியாபாரி எல்லாம் தக்காளியை குப்பைல தான் கொட்டணும். kavikumaar Ram சொல்வது நல்ல யோசனை.தக்காளி ஒன்றும் அத்தியாவசியமான காய்கறி என்பது உண்மை.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
25-நவ-202115:03:45 IST Report Abuse
Samathuvan தக்காளிதான் பேஸ்ட் ஆகி ரொம்ப நாளாச்சு, இதுவும் திராவிட சதின்னு இந்த சங்கி கும்பல் கூவும். இதுக்கு மேல காரணம் கேட்கணும்னா நம்ம எப் எம் ட்டதான் கேட்கணும் அவங்க நல்ல விளக்கம் கொடுப்பாங்க இந்த வெங்காயத்திற்கும், பூண்டுக்கும் கொடுத்ததுபோல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X