சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கணினி உலகில் ஒரு புதிய மைல் கல்..!

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தனி நபர் கணினிப் புரட்சியை கோட்டைவிட்ட ஐ.பி.எம்., அடுத்து வரவுள்ள குவாண்டம் கணினிப் புரட்சிக்கு முந்திக்கொண்டிருக்கிறது. அண்மையில், அதிவேக கணக்கிடும் ஆற்றல் வாய்ந்த குவாண்டம் கணினி சில்லு ஒன்றை ஐ.பி.எம்., அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த சில்லுக்கு 'ஈகிள்' என்ற பெயர். இதன் கணக்கிடும் திறன் வினாடிக்கு 127 கியூபிட்ஸ் என்று ஐ.பி.எம்., ஆராய்ச்சியாளர்கள்
 கணினி உலகில் ஒரு புதிய மைல் கல்..!

தனி நபர் கணினிப் புரட்சியை கோட்டைவிட்ட ஐ.பி.எம்., அடுத்து வரவுள்ள குவாண்டம் கணினிப் புரட்சிக்கு முந்திக்கொண்டிருக்கிறது.

அண்மையில், அதிவேக கணக்கிடும் ஆற்றல் வாய்ந்த குவாண்டம் கணினி சில்லு ஒன்றை ஐ.பி.எம்., அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த சில்லுக்கு 'ஈகிள்' என்ற பெயர். இதன் கணக்கிடும் திறன் வினாடிக்கு 127 கியூபிட்ஸ் என்று ஐ.பி.எம்., ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.வழக்கமான கணினிகளில், தரவுகளை 0 அல்லது 1 என்ற இரண்டே எண்களைக் கொண்ட 'பிட்'களாக சேமிப்பர்.

ஆனால், குவாண்டம் கணினிகளில் 0 மற்றும் 1 ஆகியவை ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் மற்றொன்றைப் போன்ற நிலையை கொண்டிருக்க முடியும். குவாண்டம் இயற்பியலின் இந்த விந்தையான இயல்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சில்லுகளால், வழக்கமான சிலிக்கன் சில்லுகளைவிடப் பன்மடங்கு வேகமாக கணக்கிட முடியும்.

குவாண்டம் கணினி சில்லுகளை ஏற்கனவே வேறு சில நிறுவனங்களும் தயாரித்துள்ளன. சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய 'ஜியுஷாங் 2.0' என்ற குவாண்டம் சில்லு 113 கியூபிட் திறன் கொண்டது. கூகுளின் 'பிரிஸ்டில்கோன்' என்ற குவாண்டம் சில்லுக் கு 72 கியூபிட் திறன் உண்டு. ஏன், இதே ஐ.பி.எம்., உருவாக்கிய 'ஹம்மிங் பேர்டு' குவாண்டம் சில்லுக்கு 65 கியூபிட் திறன் மட்டுமே உண்டு.

இவற்றையெல்லாம் துாக்கிச் சாப்பிடும் வேகம் கொண்டது ஐ.பி.எம்மின் 'ஈகிள்' குவாண்டம் சில்லு. இந்த வேகம் சாத்தியமானதற்கு, சில்லின் வடிவமைப்பில் சில புதுமைகளைச் செய்திருப்பதுதான் காரணம். சில்லின் கியூபிட்டுகள் அனைத்தும் ஒரே அடுக்கில் இருக்கின்றன. ஆனால், அவற்றின் கட்டுப்பாட்டு இணைப்புக் கம்பிகள் பல அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஈகிள் சில்லை பயன்படுத்த, 'ஐ.பி.எம்., கிளவுட்' சேவையில், சிலருக்கு மட்டும் வாய்ப்புக் கிடைக்கும்.

இதற்கே அசந்தால் எப்படி?
வரும் 2022 ஆம் ஆண்டில், 433 கியூபிட் திறன் கொண்ட 'குவாண்டம் ஆஸ்ப்ரே' சில்லையும், 2023ல், குவாண்டம் கான்டோர் என்ற 1,121 கியூபிட் திறன் கொண்ட சில்லையும் ஐ.பி.எம்., வெளியிட திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கிச்சாமி - மங்கலம்,இந்தியா
25-நவ-202121:05:05 IST Report Abuse
கிச்சாமி சூப்பர் தகவலுக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X