பொது செய்தி

தமிழ்நாடு

டவருக்கு பேட்டரி மாற்ற காசில்லை: பரிதாப நிலையில் பி.எஸ்.என்.எல்.,

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
தஞ்சாவூர்: 'மொபைல் போன் டவருக்கு பேட்டரி மாற்றக் கூட நிதியில்லை' என பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு போன் செய்துள்ளார். அப்போது, 'கரன்ட் நின்ற அடுத்த நிமிஷமே, மொபைல் டவர் ஆப் ஆகி விடுகிறது. சிக்னல் மீண்டும் வர பல மணி நேரம் ஆகிறது. இரண்டு ஆண்டுகளாக
டவர், பேட்டரி, காசில்லை, பரிதாப நிலை, பிஎஸ்என்எல்

தஞ்சாவூர்: 'மொபைல் போன் டவருக்கு பேட்டரி மாற்றக் கூட நிதியில்லை' என பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு போன் செய்துள்ளார். அப்போது, 'கரன்ட் நின்ற அடுத்த நிமிஷமே, மொபைல் டவர் ஆப் ஆகி விடுகிறது. சிக்னல் மீண்டும் வர பல மணி நேரம் ஆகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த பிரச்னை தொடர்கிறது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை' எனக் கூறியுள்ளார்.தஞ்சாவூர் மட்டுமின்றி, பல மாவட்டங்களிலும் இந்த புகார்கள் உள்ளன.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் 330 டவர்கள் உள்ளன. அதில் பேட்டரி பேக்கப், ஜெனரேட்டர் அமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது பல பேட்டரிகள் பழுதடைந்து, புதிய பேட்டரி மாற்ற வேண்டிய நிலையில் உள்ளன.ஜெனரேட்டரும் பழுதுடைந்துள்ளது. 'மேனுவல்' முறையில் இயங்கக் கூடிய ஜெனரேட்டரை, ஆப்பரேட் செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், அவர்களும் வருவது இல்லை.


latest tamil news


ஜெனரேட்டருக்கு டீசல் வாங்க முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி உள்ளது.தனியார் இடங்களில் டவர்களுக்கு 10 மாதங்களாக வாடகை வழங்காத நிலையில், உரிமையாளர்கள் நெருக்கடி வேறு உள்ளது.புதிய பேட்டரி மற்றும் ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் அமைக்க தேவையான நிதியை ஒதுக்குமாறு, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சருக்கு பல முறை கடிதம் அனுப்பியும் பலன் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NKR rekha - Karur,இந்தியா
26-நவ-202112:09:56 IST Report Abuse
NKR rekha ஆனா சிலை செய்ய 3000 கோடி நிதி ஒதுக்க முடியும்
Rate this:
Cancel
26-நவ-202106:02:33 IST Report Abuse
தேவதாஸ், புனே இதுக்கும் மோடிதான்.... காரணமுன்னு சொல்லுங்க...... ஏன்னா பாவம்.... மாறனுக்கு ஒன்னும் தெரியாது.....
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-நவ-202100:05:55 IST Report Abuse
DARMHAR அரசின் ரெட் டேப் அதாவது சிகப்பு நாடா என்ற அங்கு முறையில் அதுவும் கொரோனா காலத்தில் துரித காலத்தில் செயல்பட முடியாத அவ நிலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X