40 . கோல்கட்டாவின் மேயர்

Added : நவ 25, 2021
Share
Advertisement
மீண்டும் 1930ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாட காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டது. நேதாஜி சுதந்திர தின ஊர்வலம் நடத்தினார். சாத்வீகமான சட்டமறுப்பு இயக்கத்தை நடத்த காந்தி நினைத்தார். அதே சமயம் சுதந்திர தின ஊர்வலம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் நேதாஜி. சட்டமறுப்பு இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே அவர் விசாரணையின்றி சிறையில்
netaji, நேதாஜி

மீண்டும் 1930ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாட காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டது. நேதாஜி சுதந்திர தின ஊர்வலம் நடத்தினார். சாத்வீகமான சட்டமறுப்பு இயக்கத்தை நடத்த காந்தி நினைத்தார்.

அதே சமயம் சுதந்திர தின ஊர்வலம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் நேதாஜி. சட்டமறுப்பு இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே அவர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை வாழ்க்கையை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். சிறையில் அவர் பலருடன் அன்பாக பழகினார். இரண்டு ஆண்டுகள் அரசியல் பணியில் அயராது பாடுபட்டவருக்கு சிறைவாசம் சென்று ஓய்வு அளிப்பதாக அமைந்தது.

தியானம், புத்தகங்கள் வாசித்தல் என்று அமைதியாக பொழுதைக் கழித்தார். சிறையில் இருந்தபோது கல்கத்தா மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிறையில் இருந்தபடியே அவர் கோல்கட்டா நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநிலச் செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X