அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல்: அ.தி.மு.க., அழைப்பு

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட (நாளை நவ.,26ம் தேதி முதல் 28 ம் தேதி வரை) அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விண்ணப்பிக்கலாம்,'' என்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற
Admk, Local Body ELECTION, Application welcome, உள்ளாட்சி தேர்தல், விருப்பமனு, கட்சியினர், விண்ணப்பம், அதிமுக, அழைப்பு,

சென்னை: ‛‛தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட (நாளை நவ.,26ம் தேதி முதல் 28 ம் தேதி வரை) அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விண்ணப்பிக்கலாம்,'' என்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:



latest tamil news


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் மாநகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை நவ.,26ம் தேதி முதல் 28 ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பட்ட படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியினர் தங்களுக்கான விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம் விபரம்:



latest tamil news


மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம்: ரூ.5,000.நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம்: 2,500.பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம் 1,500.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அதற்கான கட்டண அசல் ரசீது வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில் சமர்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெறலாம்.

சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது தொடர்பான விபரங்களை கட்சியினர் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும். அதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
25-நவ-202115:26:50 IST Report Abuse
Samathuvan இந்த ரெண்டு பேரோட நிலைமையை நெனச்சா ரொம்ப பரிதாபமாதான் இருக்கு. என்னமா உள்ளுக்குள்ளே அழுதுகிட்டே சிரிக்கிறாங்க. எல்லாம் அம்புட்டுதான், ஹூம் எதையாவது இருக்கிறத வைத்து கடைசி காலம் வரை ஓட்டவேண்டியதுதான்.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
25-நவ-202113:19:32 IST Report Abuse
amuthan தொகுதி பங்கீடு என்னாச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X