சிங்கப்பூரில் செவிலியருக்கு கடும் தட்டுப்பாடு: அதிகாரிகள் கவலை

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்னும் கொரோனா தொற்று குறையாத காரணத்தால் அங்கு செவிலியர், மருத்துவர்கள் தேவை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், செவிலியருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கவலையில் உள்ளனர்.சிங்கப்பூரில் நிலவும் செவிலியர் தட்டுப்பாடு குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது: வெளிநாடுகளில்
SINGAPORE, STAFF NURSE, LACK, சிங்கப்பூர், செவிலியர்,  தட்டுப்பாடு, அதிகாரிகள் கவலை,

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்னும் கொரோனா தொற்று குறையாத காரணத்தால் அங்கு செவிலியர், மருத்துவர்கள் தேவை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், செவிலியருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கவலையில் உள்ளனர்.


latest tamil news


சிங்கப்பூரில் நிலவும் செவிலியர் தட்டுப்பாடு குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது: வெளிநாடுகளில் இருந்து நிறைய செவிலியர்கள் இங்கு வந்து பணிபுரிவது வழக்கம். ஆனால், சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு நிரந்த குடியுரிமை வழங்கப்படுவதில்லை. அவர்கள் இங்கு இரண்டாண்டுகள் வேலை செய்துவிட்டு அந்த பணி அனுபவத்தைக் கொண்டு கனடா, வளைகுடா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். தேர்ந்த செவிலியர் ஒருவரை தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்த்துவிட்டால், சேர்த்துவிடும் நபருக்கு 12 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வரலாறு காணாத அளவுக்கு செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டது. 2021ம் ஆண்டு முதல் அரையாண்டில் மட்டுமே 1,500 செவிலியர் ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் வெளிநாட்டைச் சேர்ந்த 500 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆண்டுக்கு 2,000 செவிலியர் ராஜினாமா என்பது இந்த ஆண்டில் 6 மாதங்களிலேயே 1,500ஐ கடந்துவிட்டது. கொரோனா பரவும் நேரத்தில் செவிலியல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202121:22:55 IST Report Abuse
அப்புசாமி இன்னிக்கி கட்டை விரல். ரெண்டு வருஷம் கழிச்சு நடுவிரல்.
Rate this:
Cancel
25-நவ-202121:21:31 IST Report Abuse
அப்புசாமி இங்கேருந்து ஆள் எடுங்க சார். ரெண்டு கோடி வேலைத் திட்டத்தில் டிக் பண்ணிருவோம். மெடல் குத்திப்போம்.
Rate this:
Cancel
Karuppiah - ????????,இந்தியா
25-நவ-202119:10:55 IST Report Abuse
Karuppiah செவிலியர்களுக்கு நிரந்த குடியுரிமை வழங்கப்பட்டால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும், தனியார் மருத்துவமனை தான் இதற்கு அரசுடன் முயலவேண்டும். சேர்த்துவிடும் நபருக்கு 12 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டால் ஏஜென்ட் சம்பாதிப்பான், செவிலியர்களுக்கு என்ன லாபம் . அரசு யோசிச்சு எடுக்கவேண்டிய முடிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X