சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

முதுகுவலி சிகிச்சைக்கு 'மெய்நிகர்' கருவி!

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் கருவி, சாகச விளையாட்டுக்களுக்கு மட்டுமே பயன்படும் என்று நினைத்துவிடாதீர்கள். அது மருத்துவ சிகிச்சைக்கும் இனி உதவும். அமெரிக்காவின் எப்.டி.ஏ., அமைப்பு, அண்மையில் முதுகு வலி சிகிச்சையில் மெய்நிகர் தலையணி கருவிகளைப் பயன்படுத்தலாம் என அனுமதித்திருக்கிறது.அப்ளைடு வி.ஆர்., என்ற மெய் நிகர் நிறுவனம், பலவித சிகிச்சைகளுக்காக
 முதுகுவலி சிகிச்சைக்கு 'மெய்நிகர்' கருவி!

விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் கருவி, சாகச விளையாட்டுக்களுக்கு மட்டுமே பயன்படும் என்று நினைத்துவிடாதீர்கள். அது மருத்துவ சிகிச்சைக்கும் இனி உதவும். அமெரிக்காவின் எப்.டி.ஏ., அமைப்பு, அண்மையில் முதுகு வலி சிகிச்சையில் மெய்நிகர் தலையணி கருவிகளைப் பயன்படுத்தலாம் என அனுமதித்திருக்கிறது.

அப்ளைடு வி.ஆர்., என்ற மெய் நிகர் நிறுவனம், பலவித சிகிச்சைகளுக்காக மெய்நிகர் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கென அது உருவாக்கியுள்ள, ஈஸ் வி.ஆர்.எக்ஸ் (EaseVRx) பிரிவு, கடந்த சில ஆண்டுகளாக சோதனைகளை நடத்தி வருகிறது.

அதில் ஒரு சோதனையாக, முதுகின் கீழ்ப் பகுதியில் நாள் பட்ட வலி உள்ளோருக்கு, மெய்நிகர் கருவியின் காட்சிகள் மற்றும் ஒலிகள் வாயிலாக சிகிச்சை தரு சோதனையை நடத்தியது.மொத்தம் 173 பேர் பங்கேற்ற இந்த சோதனையில், மனதுக்கு இதம் தரும் காட்சிகளையும், உடற்பயிற்சி மற்றும் மனப் பயிற்சிகளையும் மெய்நிகர் கருவி வாயிலாக ஆராய்ச்சியாளர்கள் வழங்கினர். குறிப்பாக, பயிற்சி செய்பவரின் மூச்சு விடும் ஒலி மற்றும் அதன் வேகம் போன்றவை இக்கருவியில் கேட்கும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் பல மாதங்கள் நடத்தப்பட்டதில், நாள்பட்ட முதுகு வலி உள்ளோருக்கு, 50 முதல் 30 சதவீதம் வரை வலி குறைந்தது.

இந்த முடிவுகளையடுத்து, முதுகு வலிக்கு மெய்நிகர் கருவியை பயன்படுத்தி சிகிச்சை தரும் முறைக்கு எப்.டி.ஏ., அனுமதி வழங்கியுள்ளது. மின்னணு கருவிகளை சிகிச்சைக்கு அங்கீகரிப்பதன் வாயிலாக, எப்.டி.ஏ., ஒரு புதிய அலைக்கு வழி வகுத்திருக்கிறது. முன்னதாக, துாக்க குறைபாடு உள்ளோருக்கு சிகிச்சை தருவதற்கு, ஆப்பிள் வாட்ச் கருவியை பயன்படுத்தலாம் என அது அனுமதி கொடுத்தது. அதேபோல, ஏ.டி.எச்.டி., எனப்படும் கவனக் குறைபாடு உள்ள சிறார்களுக்கு, மனக் குவியத் திறன்களை வளர்க்க 'வீடியோ கேம்' கருவிகளைப் பயன்படுத்தவும் எப்.டி.ஏ., அனுமதி வழங்கியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
26-நவ-202115:09:51 IST Report Abuse
sridhar என் அடுத்தது இதை விக்கணுமா நல்ல வருவீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X