சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

தெர்மாகோலுக்கு மாற்றாக பாப்கார்ன்!

Added : நவ 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணமாக இருக்கும் பொருட்களில் தெர்மாகோல் முக்கியமானது. விரிவாக்கப்பட்ட பாலிஸ்டைரினால் ஆன இந்தப் பொருள், வெப்பம் மற்றும் குளிர் தடுப்புக்குப் பயன்படுகிறது. இதே குணங்கள் கொண்ட, ஆனால் சூழல்கேடுகளை விளைவிக்காத ஒரு பொருளை இயற்கையிலிருந்தே பெற முடியும் என்பதை ஜெர்மனியின் ஜார்ஜ் அகஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.அவர்கள்
 தெர்மாகோலுக்கு மாற்றாக பாப்கார்ன்!

சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணமாக இருக்கும் பொருட்களில் தெர்மாகோல் முக்கியமானது. விரிவாக்கப்பட்ட பாலிஸ்டைரினால் ஆன இந்தப் பொருள், வெப்பம் மற்றும் குளிர் தடுப்புக்குப் பயன்படுகிறது. இதே குணங்கள் கொண்ட, ஆனால் சூழல்கேடுகளை விளைவிக்காத ஒரு பொருளை இயற்கையிலிருந்தே பெற முடியும் என்பதை ஜெர்மனியின் ஜார்ஜ் அகஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

அவர்கள் தேடிக் கண்டடைந்த மாற்று எது தெரியுமா? பாப்கார்ன்! தோற்றம், தன்மை என்று அனைத்திலும் தெர்மாகோலை ஒத்திருக்கும் மக்காச் சோளப் பொரியை, பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின், வெப்பம் மற்றும் குளிர் தடுப்புக்கு பயன்படுத்தும் வகையில் ஜெர்மனி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மக்காச் சோளத்தை பொடி செய்து, பின் வெப்பத்தில் பொரிக்கச் செய்கின்றனர். அடுத்து, தாவரப் பசையைக் கலந்து அந்தக் கலவையை, தட்டையாக அல்லது வேறு வடிவங்களில் உருவாக்க, வார்ப்புக்களில் போட்டு அழுத்துகின்றனர். கலவையின் ஈரப் பசை உலர்ந்த பின், எடுக்கப்படும் பாப்கார்ன் வார்ப்பை, அசல் தெர்மாகோல் போலவே பயன்படுத்த முடியும்.இந்த புதிய பொருள், தெர்மாகோலைவிட வெப்பத்தை நன்கு தடுக்கிறது.

மேலும், இது எளிதில் மட்கும் தன்மை கொண்டதால், தெர்மாகோல் போல குப்பையில் தேங்கி மாசு உண்டாக்காது. இன்னும் ஒரு விஷயம். மக்காச்சோள வார்ப்பை கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுத்த முடியும். இப்படி பல வகைகளில் சுற்றுச் சூழலுக்குப் பயன்படும் இந்த புதிய கண்டுபிடிப்பை ஜெர்மனியின் 'பாச்ல்' குழுமம் விரைவில் சந்தைக்குக் கொண்டுவரவிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukundan - chennai,இந்தியா
01-டிச-202111:51:50 IST Report Abuse
mukundan பசித்தால் பிய்த்து சாப்பிடலாமா? :p...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202105:05:05 IST Report Abuse
J.V. Iyer அருமை. எளிமை. இதை உடனே செயல்படுத்தவேண்டும். பாப்கார்ன் பேக்கேஜ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X