கர்நாடக மேலவை தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் 2 மனைவிக்கார பெரும் கோடீஸ்வரர்| Dinamalar

கர்நாடக மேலவை தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் 2 மனைவிக்கார பெரும் கோடீஸ்வரர்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (20)
Share
பெங்களூரு: கர்நாடகாவில் சட்ட மேலவைக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யூசப் ஷெரிப் என்னும் கோடீஸ்வரர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.1,744 கோடி.கர்நாடகாவை சேர்ந்த 54 வயதான யூசப் ஷெரிப், சட்ட மேலவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைமையிடம் விண்ணப்பித்திருந்தார். கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்
Karnataka Legislative Council, Congress, Billionaire Candidate, கர்நாடகா, சட்ட மேலவை, தேர்தல், காங்கிரஸ், கோடீஸ்வரர், வேட்பாளர்

பெங்களூரு: கர்நாடகாவில் சட்ட மேலவைக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யூசப் ஷெரிப் என்னும் கோடீஸ்வரர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.1,744 கோடி.

கர்நாடகாவை சேர்ந்த 54 வயதான யூசப் ஷெரிப், சட்ட மேலவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைமையிடம் விண்ணப்பித்திருந்தார். கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றிருந்ததால் கட்சியினர் ஆச்சரியமடைந்தனர். அதற்கு காரணம், கட்சி ரீதியாக யூசப் அந்தளவிற்கு பரிட்சயமாகாதவராக இருந்தாலும், கோடீஸ்வரராக பலராலும் அறியப்பட்டவர். வெறும் 5ம் வகுப்பே படித்த யூசப், ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்து பின்னர் கோலார் தங்க சுரங்கத்தில் தங்க தாதுக்களை சுத்தம் செய்யும் ஒப்பந்தத்தையும் கைப்பற்றியிருக்கிறார்.


latest tamil news


இவ்வாறு தனது வளர்ச்சி அதிகமாகிக்கொண்டே செல்ல தற்போது சொத்து மதிப்பும் ரூ.1,744 கோடியானது. இதில், அவரது பெயரில் ரூ.97.98 லட்சம் அசையும் சொத்தாகவும், ரூ.1643.59 கோடி அசையா சொத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது முதல் மனைவியிடம் ரூ.98.96 லட்சம் அசையும் சொத்து, ரூ.1.3 கோடி அசையா சொத்து மற்றும் தனது 2வது மனைவி பெயரில் ரூ.32.22 லட்சம் அசையும் சொத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மற்ற சொத்துகள் அவரது குழந்தைகளின் பெயரில் உள்ளதாக கூறியுள்ளார்.


latest tamil news


அதேபோல், அவரிடம் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 3 கோடி ரூபாய் மதிப்பிலான கார்களும், ரூ.3.85 கோடி மதிப்பிலான நகை, ஆபரணங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இவ்வளது சொத்து மதிப்புள்ள ஒருவர் காங்கிரஸ் சார்பில் கர்நாடக சட்ட மேலவை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X