பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு தெற்கு பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட, பா.ஜ., அலுவலக கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். அகில இந்திய தலைவர் நட்டா, திருப்பூரில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் கட்டடத்தை நேற்று மாலை திறந்து வைத்தார். ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், பா.ஜ., சொந்த அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது. தை பொங்கலின் போது மேலும்

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட, பா.ஜ., அலுவலக கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். அகில இந்திய தலைவர் நட்டா, திருப்பூரில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் கட்டடத்தை நேற்று மாலை திறந்து வைத்தார். ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், பா.ஜ., சொந்த அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது. தை பொங்கலின் போது மேலும் ஆறு மாவட்டங்களிலும், மார்ச் மாதத்தில் ஐந்து மாவட்டங்களிலும் அலுவலக கட்டடம் திறக்கப்பட உள்ளது. ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட பொருளாளர் தீபக் ராஜா, முன்னாள் மாவட்ட தலைவர் காந்தி, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஸ், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சந்திரசேகர், மொடக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அலுவலக கட்டடத்தை காணொளி காட்சி மூலம் தேசிய தலைவர் நட்டா திறந்து வைத்த பின், அலுவலக நுழைவு வாயில் பகுதியில் எம்.எல்.ஏ., சரஸ்வதி குத்துவிளக்கேற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X