பொது செய்தி

தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு திறனறி தேர்வு

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோபி: தமிழக அரசின் சார்பில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை பள்ளிகளில் இல்லாமல், வீடுகளுக்கு அருகே பொதுவான இடங்களில் அமர வைத்து, டியூஷன் எடுக்கும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக, பிளஸ் 2 முடித்தவர் மற்றும்

கோபி: தமிழக அரசின் சார்பில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை பள்ளிகளில் இல்லாமல், வீடுகளுக்கு அருகே பொதுவான இடங்களில் அமர வைத்து, டியூஷன் எடுக்கும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக, பிளஸ் 2 முடித்தவர் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர். பிளஸ் 2 முடித்தவர்கள், ஐந்தாம் வகுப்பு வரையும், அதற்கு மேல் படித்தவர்கள், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரையும் போதிக்க வசதியாக, தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், கோபி ஒன்றியத்தில், தன்னார்வலராக பணியாற்ற, 359 பேர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கான திறனறித்தேர்வு, கோபி சரவணா தியேட்டர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவி தலைமையில், ஆன்லைனில் ஆசிரியர் பயிற்றுனர்கள் சென்னியங்கிரி, சண்முகப்பிரியா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X