சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., கொள்ளையில் கைதான மூவரிடம் போலீசார் விசாரணை

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் நடந்த தொடர் ஏ.டி.எம்., கொள்ளையில் ஈடுபட்டு கைதான மூவரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.ஈரோட்டில், 2019 ஜனவரியில் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்ட, சி.எம்.எஸ். இன்போ சிஸ்டம் நிறுவன பணியாளர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த பூபாலன், 25, எட்டு ஏ.டி.எம்.,களில் இருந்து, 1.32 கோடி ரூபாயுடன் மாயமானார். இந்நிலையில் சேலம் மாவட்டம்

ஈரோடு: ஈரோட்டில் நடந்த தொடர் ஏ.டி.எம்., கொள்ளையில் ஈடுபட்டு கைதான மூவரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.


ஈரோட்டில், 2019 ஜனவரியில் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்ட, சி.எம்.எஸ். இன்போ சிஸ்டம் நிறுவன பணியாளர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த பூபாலன், 25, எட்டு ஏ.டி.எம்.,களில் இருந்து, 1.32 கோடி ரூபாயுடன் மாயமானார். இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் அக்.,17ல் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற போது பூபாலன் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் குறித்து தெரியவந்தது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பள்ளிபாளையம் ஆவாரங்காடு டிரைவர் சீனிவாசன், 27, பள்ளிபாளையம் ஆண்டிகாடு கல்லூரி மாணவர் கேசவன், 24, வெடியரசம்பாளையம் பாலகாட்டூரில் ஆட்டோ கன்சல்டன்சி நடத்தும் மணிகண்டன், 21, திருச்செங்கோடு எலந்தகுட்டைமேடு கந்தன் நகர் குமார், 27, ஆகிய நால்வரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மூன்று பைக்குகள், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி பூபாலன், சீனிவாசன், கேசவன் ஆகிய மூவரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த, 23ல் கஸ்டடி எடுத்தனர். இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் போலீசார் இரு தினங்களாக விசாரணை நடத்தினர். பின்னர் மூவரும் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X