பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து சாலை மறியல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஓமலூர்: தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய கவுன்சிலரை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமலூர், தும்பிப்பாடி ஊராட்சி, ரெட்டியூர் வனப் பகுதி அருகே, 5 ஏக்கரில் புறம்போக்கு நிலம் உள்ளது. அப் பகுதியில் வசிக்கும், 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர், இலவச வீட்டு மனை பட்டா கோரி, அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று, அங்கு சென்று, வருவாய்த்துறை அதிகாரிகள்

ஓமலூர்: தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய கவுன்சிலரை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமலூர், தும்பிப்பாடி ஊராட்சி, ரெட்டியூர் வனப் பகுதி அருகே, 5 ஏக்கரில் புறம்போக்கு நிலம் உள்ளது. அப் பகுதியில் வசிக்கும், 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர், இலவச வீட்டு மனை பட்டா கோரி, அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று, அங்கு சென்று, வருவாய்த்துறை அதிகாரிகள் நில அளவீடு செய்தனர். அப்போது, தி.மு.க., பிரமுகரான, தும்பிப்பாடியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் துரைசாமி, 47, அவருக்கு ஆதரவாக உள்ள, 17 பேருக்கு மட்டும் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்ததாக, மக்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, ஆதிதிராவிட மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்க கோரி, தின்னப்பட்டி - நாலுகால்பாலம் சாலையில் மண்ணெண்ணெய் கேனுடன், 30 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டனர். காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், தீவட்டிப்பட்டி போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பட்டா கேட்கும் மனுதாரர்கள், முறையாக தாலுகா அலுவலகம் வந்து மனு வழங்க அறிவுறுத்தினர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து துரைசாமி கூறுகையில், ''அதிகாரிகள் எத்தனை பேருக்கு பட்டா தயாரித்துள்ளனர் என்பது எனக்கு தெரியாது. அ.தி.மு.க., - வி.சி., கட்சியினர் தூண்டுதல்படி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X