பொது செய்தி

தமிழ்நாடு

தேவாலயம் பழுதுபார்ப்பு நிதி பெற விண்ணப்பிக்கலாம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, தேவாலயங்களை பழுதுபார்த்தல், மறு சீரமைப்பு பணிக்கு வழங்கப்படும் நிதி, ஒரு கோடியில் இருந்து, 5 கோடி ரூபாயாக உயர்த்தி, சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் நிதியுதவி பெற, தேவாலயம், 10 ஆண்டுக்கு மேல் சொந்த கட்டடத்தில் இயங்க வேண்டும். அந்த இடம், பதிவு துறையில் பதிவு செய்திருக்க

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, தேவாலயங்களை பழுதுபார்த்தல், மறு சீரமைப்பு பணிக்கு வழங்கப்படும் நிதி, ஒரு கோடியில் இருந்து, 5 கோடி ரூபாயாக உயர்த்தி, சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் நிதியுதவி பெற, தேவாலயம், 10 ஆண்டுக்கு மேல் சொந்த கட்டடத்தில் இயங்க வேண்டும். அந்த இடம், பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். சீரமைப்பு பணிக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றிருக்க கூடாது. உரிய படிவத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும். www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம், சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம். உரிய ஆவணம், சான்றுடன் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் தலைமையில் குழு தேவாலயத்தை ஆய்வு செய்து, கட்டட வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யும். பின், சிறுபான்மையினர் நல இயக்ககத்துக்கு பரிந்துரைக்கப்படும். நிதியுதவி இரு தவணையாக, தேவாலய வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X