பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகி மீது சொத்து அபகரிப்பு புகார்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சேலம்: மல்லூர், திருச்சி பிரதான சாலையை சேர்ந்தவர் கதிர்வேல், 81. இவர், சேலம் கலெக்டர் கார்மேகம், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம் அளித்த புகார் மனு: தி.மு.க., பேரூராட்சி செயலர் சுரேந்திரன். இவர், 2003ல், என் வீட்டின் ஒரு பகுதி அறையை தி.மு.க., அலுவலகம் நடத்திக்கொள்ள கேட்டார். நான் கேட்கும்போது காலி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு வாடகைக்கு விட்டேன். தற்போது அங்கு மகனுக்கு மளிகை கடை

சேலம்: மல்லூர், திருச்சி பிரதான சாலையை சேர்ந்தவர் கதிர்வேல், 81. இவர், சேலம் கலெக்டர் கார்மேகம், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம் அளித்த புகார் மனு: தி.மு.க., பேரூராட்சி செயலர் சுரேந்திரன். இவர், 2003ல், என் வீட்டின் ஒரு பகுதி அறையை தி.மு.க., அலுவலகம் நடத்திக்கொள்ள கேட்டார். நான் கேட்கும்போது காலி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு வாடகைக்கு விட்டேன். தற்போது அங்கு மகனுக்கு மளிகை கடை வைக்க உள்ளதால், கடந்த மே மாதம் அலுவலகத்தை காலி செய்து கொடுக்க கேட்டேன். அவர் முடியாது என்றார். அத்துடன், 'இந்த அறை எங்களுக்கு தான் சொந்தம். என்னிடம் ஆவணங்கள் உள்ளன. ஒழுங்காக அறையை, கட்சிக்கு எழுதி கொடுத்துவிடுங்கள் இல்லையேல் குடும்பத்தோடு கொளுத்தி விடுவேன்' என மிரட்டுகிறார். பொய் ஆவணம் மூலம், சொத்தை அபகரிக்க நினைப்பதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார். சுரேந்திரன் கூறுகையில், ''அந்த அலுவலகத்துக்கு வாடகையை முறையாக செலுத்தி வந்துள்ளோம். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பொது வாழ்வில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்க, சிலர் தூண்டுதலால், கதிர்வேல் என் மீது தவறான புகார் தெரிவித்து வருகிறார். அதை சட்டப்படி சந்திப்பேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X