பொது செய்தி

தமிழ்நாடு

இன்று சிறப்பு முகாம்: 1.35 லட்சம் தடுப்பூசி தயார்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சேலம்: இன்று நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாமில், 1.35 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரில், 20 லட்சத்து, 80 ஆயிரம் பேருக்கு முதல் தவணை, 10 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், 7.71 லட்சம் முதல் தவணை செலுத்தாமலும்,

சேலம்: இன்று நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாமில், 1.35 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரில், 20 லட்சத்து, 80 ஆயிரம் பேருக்கு முதல் தவணை, 10 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், 7.71 லட்சம் முதல் தவணை செலுத்தாமலும், 3.31 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்தாமலும் உள்ளனர்.நவ., 25ல்(இன்று), 11வது கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில், 1.35 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 1,392 மையங்களில், காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்த தவறியவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதேபோல், சேலம் மாநகராட்சியில், 205 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கமிஷனர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X