பொது செய்தி

தமிழ்நாடு

16 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஆனைமடுவு

Added : நவ 25, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடி, புழுதிக்குட்டையில் வசிஷ்ட நதி குறுக்கே, 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும்படி, ஆனைமடுவு அணை உள்ளது. கடந்த அக்டோபர், நவம்பரில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று காலை அணை நீர்மட்டம், 65.45 அடியாக உயர்ந்து, 248.51 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் வினாடிக்கு, 122 கன

வாழப்பாடி: வாழப்பாடி, புழுதிக்குட்டையில் வசிஷ்ட நதி குறுக்கே, 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும்படி, ஆனைமடுவு அணை உள்ளது. கடந்த அக்டோபர், நவம்பரில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று காலை அணை நீர்மட்டம், 65.45 அடியாக உயர்ந்து, 248.51 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் வினாடிக்கு, 122 கன அடி தண்ணீரும், அணையின் பிரதான மதகு வழியாக உபரிநீராக வசிஷ்ட நதியில் திறக்கப்பட்டுள்ளது. 2005 டிச., 26ல், அந்த அணை நிரம்பியது. 16 ஆண்டுக்கு பின், தற்போது அணை நிரம்பி, வசிஷ்ட நதியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆனைமடுவு அணை பாசன விவசாயிகள், வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X