சீக்கியர்களுக்கு எதிரான கருத்து: நடிகை கங்கனாவுக்கு சம்மன்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய சீக்கியர்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக கூறி டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு, நேரில் ஆஜராகும் படி நடிகை கங்கனா ரனாவத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடுமையாக போராட்டங்கள் நடத்தினர். தற்போது மத்திய அரசு
Kangana Ranaut, Summoned, Delhi Assembly, Remarks, Sikhs,
சீக்கியர்கள், எதிர்கருத்து, சர்ச்சை, நடிகை கங்கனா, டில்லி சட்டசபை குழு, சம்மன்,

புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய சீக்கியர்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக கூறி டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு, நேரில் ஆஜராகும் படி நடிகை கங்கனா ரனாவத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடுமையாக போராட்டங்கள் நடத்தினர். தற்போது மத்திய அரசு அச்சட்டங்களை ரத்து செய்துள்ளது. போராட்டம் நடத்திய சீக்கியர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என ஆரம்பம் முதலே விமர்சித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். மேலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவையும் கடுமையாக விமர்சித்தார். சாலையில் தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பினார்.


latest tamil news



இந்நிலையில், கடந்த நவ., 20 அன்று தனது சமூக வலைத்தளத்தில் சீக்கியர்களை விமர்சித்து பதிவொன்றை இட்டிருந்தார். அதில் “காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசாங்கத்தை வளைக்கலாம். நாம் ஒரு பெண்மணியை மறந்து விடக் கூடாது. அவர்களை தனது காலணியால் நசுக்கிய ஒரே பெண் பிரதமர். அவர் இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் தந்திருந்தாலும் பரவாயில்லை. தன் உயிரையே விலையாகக் கொடுத்து அவர்களை கொசுக்களைப் போன்று நசுக்கினார். தேசத்தை பிளவுபடுத்த விடவில்லை,” என கூறியிருந்தார்.

சீக்கியர்களை பயங்கரவாதிகளாக கங்கனா சித்தரிப்பதாக இதற்கு அச்சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கங்கனா மீது மும்பை தொழிலதிபர், டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுத் தலைவர்கள், ஷிரோன்மனி அகாலி தள கட்சி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் ராகவ் சத்தாவை தலைவராக கொண்ட டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு, ‛‛சர்ச்சை கருத்து தொடர்பாக டிச., 6 அன்று கங்கனா ரனாவத்தை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்,'' என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
26-நவ-202108:57:45 IST Report Abuse
Priyan Vadanad இந்த பெண் பேச்சுகளில் சந்தேகம் வருகிறது. காங்கிரசை முற்றிலும் துடைத்தெறிய கங்கணம் கட்டிக்கொண்டு, யாரோ, எந்த கட்சியோ இந்த பெண்ணை இப்படி வில்லங்கமாக பேச வைப்பதுபோல தெரிகிறது. பல சர்ச்சை பேச்சுகள்.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
26-நவ-202107:14:39 IST Report Abuse
Milirvan உண்மைய சொன்னா அச்சுறுத்துறாங்களே? இதையே செல்வாக்குள்ள அரசியல்வாதி சொல்லியிருந்தா பேசாம இருந்துருப்பானுவோ..
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
25-நவ-202123:31:33 IST Report Abuse
தமிழன் சிங்கப்பெண்மணி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X