பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறி மண் அள்ளிய புகாரால் தடுத்த தாசில்தார்

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆத்தூர்: விதிமீறி மண் அள்ளியதாக புகார் எழுந்ததால் அப்பணியை தாசில்தார் தடுத்து நிறுத்தினார். ஆத்தூர், மல்லியக்கரை, சன்னாசி வரதன் மலை அடிவார பகுதியில், விதிமீறி மண் அள்ளுவதோடு, மழையால் மண்சரிவு ஏற்படும் என, புகார் எழுந்தது. இதனால், ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, தாசில்தார் மாணிக்கம் கூறுகையில், ''மண் அள்ள

ஆத்தூர்: விதிமீறி மண் அள்ளியதாக புகார் எழுந்ததால் அப்பணியை தாசில்தார் தடுத்து நிறுத்தினார். ஆத்தூர், மல்லியக்கரை, சன்னாசி வரதன் மலை அடிவார பகுதியில், விதிமீறி மண் அள்ளுவதோடு, மழையால் மண்சரிவு ஏற்படும் என, புகார் எழுந்தது. இதனால், ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, தாசில்தார் மாணிக்கம் கூறுகையில், ''மண் அள்ள கனிமவளத்துறை மூலம் பாலு என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு விதிமீறி மண் அள்ளுவதாக புகார் வந்ததால் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. நாளை(இன்று), வருவாய், கனிமவளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்த பின், மண் அள்ள அனுமதிக்கப்படும். விதிமீறி மண் அள்ளியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X