சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.12 லட்சம் மோசடி: பெண் மீது 'பகீர்' புகார்

Added : நவ 25, 2021
Share
Advertisement
இடைப்பாடி: மேட்டூர், புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; மின்வாரிய பணியாளர். இவர், சமீபத்தில் இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு: இடைப்பாடி, பெருமாள் கோவில் காலனியை சேர்ந்தவர் விமலா. இவர், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உறவினர் எனக்கூறி அறிமுகமானார். தொடர்ந்து, என் மகள் சர்மிளாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, 2018ல், 12 லட்சத்து, 56 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.

இடைப்பாடி: மேட்டூர், புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; மின்வாரிய பணியாளர். இவர், சமீபத்தில் இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு: இடைப்பாடி, பெருமாள் கோவில் காலனியை சேர்ந்தவர் விமலா. இவர், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உறவினர் எனக்கூறி அறிமுகமானார். தொடர்ந்து, என் மகள் சர்மிளாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, 2018ல், 12 லட்சத்து, 56 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார். மூன்று ஆண்டாகியும், வேலை வாங்கி தராததோடு, பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று, ராஜேந்திரன் மகன் நவீன், 25, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து மீண்டும் புகார் கொடுக்க முயன்றார். ஆனால், ஏற்கனவே புகார் உள்ளதால் நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் அவரை அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X