சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் இருந்து மாணவன் சடலமாக மீட்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆத்தூர்: மாயமான மாணவன், தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த, கூலித்தொழிலாளி மகேந்திரன் மகன் புகழ், 9. இவர், அரசு உதவி பெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 19ல் பாட்டி வீட்டுக்கு போவதாக கூறிச்சென்ற, அவரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கெங்கவல்லி போலீசில் புகாரளித்தனர். நேற்று, அதே பகுதியில்

ஆத்தூர்: மாயமான மாணவன், தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த, கூலித்தொழிலாளி மகேந்திரன் மகன் புகழ், 9. இவர், அரசு உதவி பெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 19ல் பாட்டி வீட்டுக்கு போவதாக கூறிச்சென்ற, அவரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கெங்கவல்லி போலீசில் புகாரளித்தனர். நேற்று, அதே பகுதியில் உள்ள துரைசாமி வீடு அருகே உள்ள, 10 அடி ஆழ தண்ணீர் தொட்டியில், ஒரு சிறுவன் உடல் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், மாயமான புகழ் என தெரிந்தது. உடலை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X